HomeUncategorizedஇயக்குநர் லிஜோவின் பிரமாண்டமான திரை அனுபவத்தின் சிறு துளியாய் வெளியானது மோகன்லாலின் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின்...

இயக்குநர் லிஜோவின் பிரமாண்டமான திரை அனுபவத்தின் சிறு துளியாய் வெளியானது மோகன்லாலின் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் டீசர்!

Published on

திரையுலக காதலர்களின் நீண்ட காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து, மோகன்லாலின் வரலாற்றுத் திரைப்படமான ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

புகழ்மிகு இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மற்றும் மோகன்லால் ஆகியோரின் கூட்டணியின் முதல் திரைப்படமாக மிகபிரமாண்ட படைப்பாக இப்படம் வெளிவருகிறது.

ஜான் & மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி ஃபிலிம்ஸ், மேக்ஸ்லேப் & சரேகமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

நடிகர் மோகன்லால் கூறுகையில், “படைப்பாளி லிஜோ ஒரு பிரமாண்டமான திரை அனுபவத்தை உருவாக்கியுள்ளார், அதன் ஒரு துளியை இந்த டீசரில் பார்வையாளர்கள் பார்க்க முடியும்” என்றார்.

‘மலைக்கோட்டை வாலிபன்’ யூட்லீ நிறுவனம் மோகன்லாலுடன் இணைந்து தரும் முதல் திரைப்படமாகும். “லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஒரு புதுமையான உலகை படைத்ததோடு மட்டுமல்லாமல், மோகன்லால் உடன் அற்புத நடிகர்கள் கூட்டணியையும் இப்படத்தில் இணைத்துள்ளார். மலையாள திரை உலகில் இப்படம் மிக முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகும், ஏனெனில் இதன் தீம், பிரம்மாண்டம் மற்றும் உணர்ச்சிகரமான பின்னணி என அனைத்தும் உலகளாவிய தன்மையைக் கொண்டுள்ளன. இதனால்தான் இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும்” என்கிறார் சரேகாமா இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் – பிலிம்ஸ் & ஈவென்ட்ஸ் சித்தார்த் ஆனந்த் குமார்.

‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்திற்கு வசனம் எழுதியவர், இதற்கு முன்பு லிஜோவுடன் ‘நாயகன்’, ‘ஆமென்’ படங்களில் பணியாற்றிய P S ரஃபீக் ஆவார். “என்னைப் பொறுத்தவரை, ஒரு கருப்பொருளை திரைப்படமாக உருவாக்கும் செயல்முறையாக நடந்தது, ஒரு பெரிய வெற்றியை ப்ளாக்பஸ்டரை உருவாக்கவேண்டும் என்ற அழுத்தத்திலிருந்து இது உருவாகவில்லை, இது இயல்பாக நடந்த திரைப்படம். ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் அடிப்படை கரு, சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்குள் முளைத்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விரிவான கதைக்களமாக உருமாற்றம் பெற்றது. எழுத்தாளர் ரஃபீக் அந்த உலகத்தை என்னுடன் இணைந்து விரிவுபடுத்தினார், அதன் பிறகுதான் அந்த பாத்திரத்திற்கு லாலேட்டன் (மோகன்லால்) சரியான பொருத்தமாக இருப்பார் என்பதை நாங்கள் உணர்ந்தோம்,” என்கிறார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.

“மோகன்லாலுடன் நீண்ட நாள் பழகிய நான், திரைப்படத் தயாரிப்பில் இறங்க முடிவு செய்தபோது, இயல்பாகவே அவரை மிகப்பெரியதொரு படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க விரும்பினேன். லிஜோ போன்ற திறமையான இயக்குநர் மோகன்லாலுடன் கைகோர்க்கும் போது, மக்கள் கண்டிப்பாக மிகப்பெரும் பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கலாம்,” என்கிறார் ஷிபு பேபி ஜான்.

இப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைக்க, மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெராடி, டேனிஷ் சைட், மனோஜ் மோசஸ், கதா நந்தி மற்றும் மணிகண்டன் ஆச்சாரி ஆகியோர் மிக முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். படம் ஜனவரி 25, 2024 அன்று திரைக்கு வருகிறது.

Latest articles

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8 முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா...

More like this