HomeGeneralஇரா.சரவணன் இயக்கத்தில் அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2.'

இரா.சரவணன் இயக்கத்தில் அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2.’

Published on

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது அடுத்த படைப்பாக ‘நந்தன் 2’ திரைப்படத்தை தற்போது உருவாக்கி வருகிறார்.
இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இரா.சரவணன் எழுதி இயக்குகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தின் முதல் டைட்டில் லுக் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
வெளியாகியுள்ள டைட்டில் போஸ்டர், வழக்கமான திரைப்பட போஸ்டர்களில் இருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளது. முழுவதும் கருப்பு-வெள்ளை பின்னணியில், ஒரு சிறுமியின் கையில் தண்ணீர் ஏந்திப் பிடித்திருக்கும் உலோகப் பாத்திரத்தின் பிரதிபலிப்பில் கேமராக்களுடன் செய்தியாளர்கள் மற்றும் படக்குழுவினர் இடம் பெறுவது போன்ற காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த பிரதிபலிப்பின் மையத்தில் சிவப்பு நிறத்தில் இடம்பெற்றுள்ள ‘நந்தன் 2’ என்ற தலைப்பு, படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
‘நந்தன் 2’ படத்திலும் சமூக அக்கறை கொண்ட மற்றொரு முக்கியமான பிரச்சனையை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார். ‘நந்தன்’ படத்தை விட இன்னும் அழுத்தமான படைப்பாக  சமூக அக்கறை மிக்க படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது.
தற்போது ‘நந்தன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதேநேரம் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ‘நந்தன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இரா. சரவணன் உருவாக்கும் அடுத்த படைப்பு என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இரா. சரவணனின் இயக்கமும், நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையும் இணையும் இந்தப் புதிய கூட்டணி, படத்தின் கதையையும் அதன் உணர்வையும் வலுப்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் ‘நந்தன் 2’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் துணை நடிகர்கள் குறித்த தகவல்கள் மற்றும் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் தொடர்பான முழுமையான விவரங்கள், அடுத்தடுத்த அப்டேட்களில் படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Latest articles

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின்...

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

பீப் சினிமா விமர்சனம்

புத்திசாலித்தனமான கதைப்பின்னலில் 'பீப்.' ஹீரோ ராகவ்க்கு புகைப்படங்களை வைத்து, அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்து...

More like this