HomeCinemaதமிழ்த் திரையுலகுக்கு உலகத் திரைப்பட விழாக்களில் பெருமை சேர்க்கும் மாண்புமிகு பறை!

தமிழ்த் திரையுலகுக்கு உலகத் திரைப்பட விழாக்களில் பெருமை சேர்க்கும் மாண்புமிகு பறை!

Published on

அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழாவில் (Cannes Film Festival) மே 2025-இல் சிறப்பாக பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்று, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இத்திரைப்படம் மீண்டும் அதே கேன்ஸ்–ல் நடைபெறும் World Film Festival–இல் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற Official Selection–இல் Best Social Justice Film (சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்) என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. இதற்கான வெற்றி அறிவிப்பு வரும் நவம்பர் 27 அன்று வெளியாக உள்ளது.

அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற Othismos Film Festival–இல் Culture, Heritage and Local Identity (கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம்) என்ற பிரிவில் விருதைப் பெற்றுள்ளது. நமது பறை இசையின் அடையாளத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை “மாண்புமிகு பறை” திரைப்படத்திற்கே சொந்தமானது.

சியா புரொடக்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது ஒரு சாதாரண கதை அல்ல — பறை என்ற நம் தொன்மை வாய்ந்த இசைக்கருவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது.
“இது பறைக்கு இன்னொரு பிறப்பு; முடிவல்ல, ஆரம்பம்…” பறை நம் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களிலும், கலாச்சாரங்களிலும் ஒலித்துவருகிறது. ஆனால், இந்த முறை கதை ஐரோப்பாவிலிருந்து — குறிப்பாக பிரான்ஸிலிருந்து — தொடங்குகிறது. பறை எப்படி நம் நாட்டின் எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் ஒரு வலிமையான குரலாக பரவியது என்பதை படம் வலியுறுத்துகிறது.

பறை என்பது இசை மட்டுமல்ல — அது ஒரு அடையாளம், ஒரு அதிர்வு, ஒரு சமூக உணர்வு. அந்த அதிர்வில் நம்மையும் இணைத்துக் கொள்ளும் முயற்சிதான் மாண்புமிகு பறை.’

Latest articles

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்கள் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது! -‘அன்பே டயானா’ பட விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் 

ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன் நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும்...

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...

புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிரம்பிய துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது…...

More like this