HomeCinemaமருதம் சினிமா விமர்சனம்

மருதம் சினிமா விமர்சனம்

Published on

மழை பெய்யாவிட்டாலும் பாதிப்பு; அதிகம் பெய்தாலும் பாதிப்பு.

பேங்கில் லோன் கிடைப்பது கஷ்டம்; விளைச்சல் எதிர்பார்த்தபடி இல்லாவிட்டால் கிடைத்த லோனை திருப்பிக் கட்டுவது கஷ்டம்.

ரசாயன உரம் போட்டால் விளைநிலம் பாழாகும்; போடாவிட்டால் பயிர்களை செழுமையாக வளர்த்து ஆளாக்குவது சிரமம். இயற்கை உரத்திலேயே விவசாயம் செய்யலாம் என்றால் செலவு அதிகரிக்கும்.

இப்படி வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம். அந்தளவுக்கு ரிஸ்க்கானது விவசாயம்.

இந்த படத்தின் நாயகன் விவசாயி. அவனுக்கு வருகிற சோதனை வித்தியாசமானது; விசித்திரமானது. அவனுக்கு தெரியாமலே அவனது விளைநிலம் வங்கி மூலம் ஏலத்தில் விற்கப்படுகிறது. அதை மீட்க அவன் பெரியளவில் கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது; சட்டப் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் அதிகளவில் சினிமாத்தனம் கலக்காமல் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் வி கஜேந்திரன்.

ஏற்கும் கேரக்டராகவே மாறிவிடுகிற விதார்த், எளிய விவசாயியாக, தன் நிலத்தை பறிகொடுத்து மீட்க முடியாமல் பரிதவிப்பவராக, தன்னை சூழ்ச்சி செய்து நிலத்தை பறித்துக்கொண்ட வங்கிக்கு எதிராக கோர்ட்டில் வாதாடுபவராக, பாசக்கார கணவனாக, பிரியமுள்ள தகப்பனாக கனமான கதாபாத்திரத்தை ஏற்று தன் இயல்பு மீறாத நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார்.

கணவனின் கஷ்ட நஷ்ட தருணங்களில் தோள் கொடுத்து மனதுக்கு பலமூட்டும் பணியை சரியாகச் செய்திருக்கிறார் விதார்த்தின் மனைவியாக வருகிற ரக்ஷனா.

வங்கியின் உயரதிகாரியாக இருந்து அப்பாவி விவசாயிகளின் நிலத்தைக் குறிவைத்து அபகரிக்கும் சூழ்ச்சிக்காரராக சரவண சுப்பையா கம்பீரமாக வந்து போகிறார்.

மற்றவர்கள் தங்களது பாத்திரங்களின் தன்மையறிந்து நடித்திருக்க, என் ஆர் ரகுநந்தன் இசையில் பாடல்கள் இதம் கூட்டியிருக்கின்றன. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்தை தாங்கிப் பிடித்து தரம் உயர்த்தியிருக்கின்றன.

வலியவர்களை எதிர்க்கும் எளியவன் என்கிற பழகிப்போன கதைக்களத்தை எடுத்துக்கொண்டு, வங்கிகள் மூலமாக விவசாயிகள் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றப்படலாம் என்பதை எடுத்துக்காட்டி எச்சரிக்கை மணியடித்திருக்கிற மருதம் தமிழ் சினிமாவின் பெருமிதம்!

Rating 4 / 5

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this