HomeCinemaதேஜா சஜ்ஜா நடிப்பில் தைரியம், விதி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் இன்னொரு வடிவத்தைக் காட்டவிருக்கும் 'மிராய்'...

தேஜா சஜ்ஜா நடிப்பில் தைரியம், விதி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் இன்னொரு வடிவத்தைக் காட்டவிருக்கும் ‘மிராய்’ திரையனுபவம் அக்டோபர் 10 அன்று ஜியோஹாட்ஸ்டாரில்! 

Published on

ஃபேண்டஸி- ஆக்‌ஷன் கதையாக உருவாகியுள்ள ‘மிராய்’ அக்டோபர் 10 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. எமோஷன், புராணம் மற்றும் ஆக்‌ஷன் ஆகியவற்றுடன் இதுவரை பார்த்திராத பிரம்மாண்ட காட்சிகளுடன் படம் இருக்கும்.

விதியும் தெய்வீகமும் மோதும் உலகில் அமைக்கப்பட்டுள்ள ‘மிராய்’, மனிதகுலத்திற்கு சமநிலையையும் நம்பிக்கையையும் மீட்டெடுக்க அனைத்து தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போர்வீரனின் கதையைச் சொல்கிறது. அற்புதமான காட்சியமைப்புகள், திறமையான நடிகர்கள் மற்றும் ஆழமான கதையுடன், ஜியோஹாட்ஸ்டாரில் இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-சவுத் டிஜிட்டல் வெளியீடுகளில் ஒன்றாக ‘மிராய்’ இருக்கும்.

இந்தப் படத்தில் தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ரித்திகா நாயக், ஜகபதி பாபு, ஜெயராம் மற்றும் ஷ்ரியா சரண் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நடிகர் ராணா டகுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்க, நடிகர் பிரபாஸ் சிறப்பு குரல் கொடுத்துள்ளார். கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு, கவுரா ஹரி இசையமைத்திருக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ளனர்.

படத்தின் சவுண்ட் டிராக், பிரம்மிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் தீவிரமான கதை ஆகியவற்றிற்காக டிரெண்டான இந்தக் கதை அதன் கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் காட்சிகளுக்காக சமூகவலைதளத்தில் அதிகம் பேசப்பட்டது.

ஜியோஹாட்ஸ்டாரில் அக்டோபர் 10 ஆம் தேதி டிஜிட்டல் பிரீமியர் ஆகும் ‘மிராய்’ பார்வையாளர்களுக்கு தைரியம், விதி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் இன்னொரு வடிவத்தைக் காட்ட இருக்கிறது.

Latest articles

பிளாக் கோல்டு சினிமா விமர்சனம்

ஹீரோ வில்லன்களை சுற்றி வளைத்தபின் ஒரு இடத்தில் வெறித்தமான பார்வையுடன் உட்கார்ந்து, கையில் ஒரு இரும்புத் துண்டை பிடித்தபடி...

ஜான் டோ சினிமா விமர்சனம்

கேரள போலீஸ் ஒரு சிறுவன் இறந்துபோனதன் பின்னணியை அலசி ஆராய்கிறது. தமிழ்நாடு போலீஸ் ஒரு சிறுவன் காணாமல் போனதன்...

இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!

இந்தியாவின் முதல் படிக்கிணறு கலைக் கண்காட்சியான (Stepwell Art Biennale) பவோலி ஆர்ட் சங்கம் அமைப்பில், கலாச்சாரம் மற்றும்...

தெருக்குறள் அறிவின் காதலின் அழகான உணர்வுகளைச் சொல்லும் ‘ஹலோ’ ஆல்பம் பாடல்! 

https://www.youtube.com/watch?v=Y2v2XjyTP4o Bigson Records தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ’ இசை ஆல்பத்தில் தெருக்குறள் அறிவு மற்றும் அஸ்வதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்....

More like this