HomeCinemaவிவசாயிகளை மையப்படுத்திய கதை; ஹீரோவாக ஏற்கும் கதாபாத்திரமாக மாறிவிடும் விதார்த்... ரிலீஸுக்கான பணிகளில் பரபரப்பாக 'மருதம்'...

விவசாயிகளை மையப்படுத்திய கதை; ஹீரோவாக ஏற்கும் கதாபாத்திரமாக மாறிவிடும் விதார்த்… ரிலீஸுக்கான பணிகளில் பரபரப்பாக ‘மருதம்’ படக்குழு!

Published on

விதார்த் நடிப்பில் விவசாயிகளின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசுகிற சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ளது ‘மருதம்.’

தற்காலத்திய சமூகத்தில் இன்னொருவனை ஏமாற்றித்தான் நாம் முன்னுக்கு வரவேண்டும், அது தவறில்லை என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் மேலோங்கிவிட்டது. இப்படிப்பட்ட சமூகத்தில் ஏமாற்றத்திற்குள்ளாகி பாதிக்கப்படும் ஒரு விவசாயி, அந்த பாதிப்பிலிருந்து மீள்கிறானா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை. பரபரப்பான சம்பவங்களுடன், அழுத்தமான திரைக்கதையில் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.

இயக்குநர்கள் சரவண சுப்பையா, மோகன் ராஜா, பொம்மரிலு பாஸ்கரிடம் பணிபுரிந்தவரும், அடையாறு திரைப்பட கல்லூரியில் பயின்றவரும், தற்பொது எஸ் ஆர் எம் கல்லூரியில் உதவிப் பேராசியராக பணியாற்றுபவருமான கஜேந்திரன் இந்த படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

நம் தமிழின் ஐந்திணைகளில் விவசாய நிலத்தினை குறிக்கும் மருத நிலத்தின் அடையாளமாக இப்படத்திற்கு மருதம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக ரக்‌ஷனா நடித்துள்ளார். அருள் தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, தினந்தோறும் நாகராஜ், மாத்யூ வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதை ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பதால் அப்பகுதியைச் சுற்றி முழு படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படம் வரும் அக்டோபரில் திரைக்கு வருகிறது.

படக்குழு:-

இசை: என் ஆர் ரகுநந்தன்

பாடல்கள்: நீதி

ஒளிப்பதிவு: அருள் சோமசுந்தம்

படத்தொகுப்பு: சந்துரு பி

மக்கள் தொடர்பு: ஏ ராஜா

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this