HomeCinemaஉண்மை சம்பவ பின்னணியில் தமிழகத்தின் தலைசிறந்த ஆன்மீக சுற்றுலா தளங்களில் நடக்கும் கதையில் உருவாகும் மலையப்பன்...

உண்மை சம்பவ பின்னணியில் தமிழகத்தின் தலைசிறந்த ஆன்மீக சுற்றுலா தளங்களில் நடக்கும் கதையில் உருவாகும் மலையப்பன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பு!

Published on

இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவின் உதவி இயக்குநர் குருச்சந்திரன் நடித்து இயக்கும் படம் ‘மலையப்பன்.’

முக்கியமான கதாபாத்திரங்களில் இயக்குர்கள் பேரரசு, சுப்ரமணிய சிவா,  ஷரவணா சுப்பையா உள்ளிட்டோர் நடிக்க மற்ற கதாபாத்திரங்களில் முன்னணி நட்சத்திரங்கள் இணைகின்றனர்.

படம் பற்றி இணை இயக்குநர் மூதுரை பொய்யாமொழியிடம் கேட்டபோது, ”சென்னை போன்ற பெருநகரத்தில் தொடங்கும் திரைப்படத்தின் கதை, ஒட்டுமொத்தமாக மலையும் மலை சார்ந்த இடமான மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை சுற்றியுள்ள கிராமங்களிலும், வாசிமலையான் கோயில் மலை, சதுரகிரி மலை, பருவதமலை, வெள்ளியங்கிரி மலை போன்ற தமிழகத்தின் தலைசிறந்த ஆன்மீக சுற்றுலா தளங்களில் இந்த கதையின் நிகழ்வுகள் நடப்பது போன்று ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுக் கதை அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக திரைப்படங்கள் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி காட்சி அமைப்புகள் இருக்கும்.

இந்த படத்தின் கதை சென்னை போன்ற பெரு நகரங்களில் தொடங்கி கதாநாயகனின் வாழ்க்கை எப்படி கிராமங்களில் ஒரு உன்னதமான காதலோடு கதை எப்படி நகர்கிறது என்பதை மிகவும் எதார்த்தமாகவும் தத்ருபமாகவும் காட்சிகளாக உருவாக்கப்பட்டு வருகிறது” என்றார்.

லோக்கல் சரக்கு, கடைசி தோட்டா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த சுவாமிநாதன் இராஜேஷ் இசைக்கு, கவிஞர் காதல்மதி பாடல் எழுத, பிரபல பின்னணி பாடகர் பிரசன்னா பாட, இராம்தாஸ் – விஜயா முகன் நடனம் அமைக்க, பி.எல். தேவா அரங்கம் அமைத்துள்ளார்.

இலட்சுமணன் படத்தொகுப்பு செய்ய, திருப்பூர் செ. செல்வம் இணைத் தயாரிப்பில் மலையப்பன் வேகமாக வளர்ந்து வருகிறான்.

Latest articles

பருந்து சினிமா விமர்சனம்

சமூகத்துக்கும், உரிய வயதும் பக்குவமும் இல்லாமல் காதலிக்கிறவர்களுக்கும் கருத்து சொல்கிற படம். மதுரைப் பக்கமுள்ள ஒரு கிராமத்தில் ஒரு வசதியான...

காவேரி மருத்துவமனையின் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளுக்கான ‘சமத்வா’ சிறப்பு மையத்தை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார்!

உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற பிரச்சனைகளுக்கு விரிவான, ஒருங்கிணைந்த சிகிச்சை, அத்துடன் வாழ்க்கை முறை மாற்றத்திற்கான பிரத்யேக...

சூனியக்காரி, தேவதை, ப்ளாக் ஹோல்… ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=bKJve0D7p-Y GM Morgan Films தயாரிப்பில், R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ (Drones). சித்தி...

SharonPly Honours Five Masters of Woodcraft at Seventh I AM STRONGEST Awards!

CARVED IN STRENGTH celebrates artisans preserving generations of craftsmanship while adapting traditional woodcraft for...

More like this