HomeCinemaபடப்பிடிப்பு நிறைவடைந்து தலைப்பு மாற்றம் செய்யப்பட்ட 'அஜயன் பாலாவின் மைலாஞ்சி.'

படப்பிடிப்பு நிறைவடைந்து தலைப்பு மாற்றம் செய்யப்பட்ட ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி.’

Published on

பிரபல எழுத்தாளரும், வெற்றிபெற்ற பல திரைப்படங்களின் வசனகர்த்தாவுமான அஜயன் பாலா எழுதி இயக்கும் முதல் திரைப்படம் ‘மைலாஞ்சி.’

‘கன்னிமாடம்’ படத்தில் நடித்து சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா விருதை வென்ற ஸ்ரீராம் கார்த்திக் இயற்கை புகைப்பட கலைஞர் வேடத்தில் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ‘கோலிசோடா 2’ படத்தில் நடித்த கிரிஷா குருப் நாயகியாக நடிக்கிறார். முனீஷ்காந்த், தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம்புலி நடிக்கிறார். ஸ்ரீராம் கார்த்திக் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் ‘மைலாஞ்சி’ என்ற தலைப்பு தற்போது ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ என மாற்றப்பட்டுள்ளது.

தலைப்பு மாற்றம் குறித்து பேசிய அஜயன் பாலா, ‘‘திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த நடைமுறையில் உள்ள சில சிக்கல்களில் காரணமாகவே பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்திருந்தும் இதே தலைப்பில் வேறு ஒரு படம் திரைக்கு வந்த காரணத்தால் எங்கள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நாம் உணரத் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. இக்கருத்தை வலியுறுத்தும் விதத்தில் மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்டு அழகான காதல் கதையாக மிகவும் அழகாகவும் உணர்ச்சிபூர்வமான வகையிலும் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். பெரும்பாலான காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டன. ஒரே மாதத்தில் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. செழியனின் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும்.

படத்தின் கதையை பெரிதும் விரும்பி பாராட்டு தெரிவித்த இசைஞானி இளையராஜா, படத்தின் நான்கு பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். அவரது இசையில் உருவான பாடல்கள் அடுத்த வருடம் முதல் காதலர்களின் தேசிய கீதமாக இருக்கும்” என்றார்.

நல்ல கதையின் மீது பெரும் நம்பிக்கை வைத்து தமிழ் சினிமாவின் தரமான கலைஞர்களைக் கொண்ட கூட்டணி இந்த படத்திற்காக பணத்தைக் கருத்தில் கொள்ளாமல் கைகோர்த்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

‘பொன்னியின் செல்வன்’, ‘ஆர் ஆர் ஆர்’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு படத்தொகுப்பு செய்த இந்தியாவின் முதன்மையான படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பங்காற்றியுள்ளார்.

லால்குடி இளையராஜா கலை இயக்கத்தை கையாண்டுள்ளார்.

இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகிறது.

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ்த் திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா, ‘சித்திரம் பேசுதடி’, ‘பள்ளிக்கூடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘லக்ஷ்மி’, ‘தலைவி’ உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

2017-ம் ஆண்டு வெளிவந்த ‘ஆறு அத்தியாயம்’ திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கியிருந்தார். அவர் இயக்கும் முதல் முழுநீள திரைப்படம் இது.

Latest articles

‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் – ஏழு தசாப்த பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்!

இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி...

கடைசி 30 நிமிடம் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் படம்! -அன்பில் அவன் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் ஆர்.கார்த்திகேயன்

அசோக் செல்வன் நடித்துள்ள ‘அன்பில் அவன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் படத்தின் நாயகன்...

வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’  டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

https://www.youtube.com/watch?v=8e_1-E8cw-s இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர்...

‘அன்பில் அவன்’ திரைப்படம் அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

பட வெளியீடு சம்பந்தமாக அன்பில் அவன் படக்குழு விடுத்துள்ள அறிக்கையிலிருந்து... ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர...

More like this