HomeCinemaபிளாக்பஸ்டர் மாமன் திரைப்படம் விரைவில் ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது!

பிளாக்பஸ்டர் மாமன் திரைப்படம் விரைவில் ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது!

Published on

ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சி, விரைவில் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் திரைப்படமான மாமன்’ திரைப்படத்தை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. ஃபேமிலி எண்டர்டெயினரான மாமன் படம், குடும்ப உறவுகளின் உணர்வுகளை அழகாகப் பேசியுள்ளது. இந்தப் படத்தில், சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஸ்வாசிகா என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் லட்டுவாக குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவன் கலக்கியுள்ளார்.

மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சியில், பிரத்தியேகமாக உலக டிஜிட்டல் பிரீமியராக வெளியிடப்பட உள்ளது.

இப்படம் மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் மருமகனுக்கான உயிரைத்தரத் தயாராக இருக்கும் மாமனுக்கும் (சூரி), மருமகன் லட்டுவுக்கும் உள்ள உறவைப் பற்றிச் சொல்கிறது. பல வருடக் காத்திருப்புக்குப் பிறகு, சகோதரி கிரிஜா (ஸ்வசிகா) க்கு குழந்தை பிறக்கிறது. மாமனும் மருமகனும் பாசமலர்களாகத் திரியும் நிலையில், இன்பா (சூரி), மருத்துவரான ரேகாவை (ஐஸ்வர்யா லட்சுமி) மணக்கிறார். மருமகன் மாமன் மீது வைத்திருக்கும் பாசம், குடும்பத்தில் பெரும் பிரச்சனைகளைக் கொண்டு வருகிறது.

குடும்ப உறவுகளின் எல்லா பக்கங்களிலும் கோபங்கள் வெடிக்கும்போது, திருமணத்தில் மட்டுமல்ல, முழு குடும்பத்திலும் விரிசல்கள் தெரியத் தொடங்குகின்றன. திருமணத்தில் மட்டுமல்லாது, மொத்த குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சனைகளை, குடும்ப உறவுகள் எப்படிக் கடந்து வருகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. மாமன் குடும்பத்தோடு இணைந்து அனைவரும் ரசித்துப் பார்க்கக் கூடிய அழகான படம்.

படத்தின் பிரிமியர் தேதி பற்றிய விபரம் விரைவில் வெளியாகும்.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this