HomeCinemaகுடும்ப பார்வையாளர்களைக் கவரும் வகையில் மாதவன் நடித்துள்ள ‘ஆப் ஜெய்சா கோய்’ படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ்...

குடும்ப பார்வையாளர்களைக் கவரும் வகையில் மாதவன் நடித்துள்ள ‘ஆப் ஜெய்சா கோய்’ படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது!கையில்

Published on

ஆர் மாதவன் நடித்துள்ள ‘ஆப் ஜெய்சா கோய்’ படத்தின் கதைப்படி,

42 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தனது சொந்த வாழ்க்கையின் விதிகளை மீண்டும் எழுதத் தொடங்கினால் என்ன ஆகும்? ஸ்ரீரேணு திரிபாதியாக ஆர். மாதவனும், மது போஸாக பாத்திமா சனா ஷேக்கும் நடித்திருக்கும் ’ஆப் ஜெய்சா கோய்’ (’உன்னைப் போல் ஒருவர்’) படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது.

எதிர்பாராத சூழ்நிலைகளில் நமக்கு கிடைக்கும் துணை, காதல் மற்றும் தோழமை ஆகியவற்றைக் கொண்டாடும் ஃபேமிலி டிராமாவாக இது உருவாகியிருக்கிறது.

ஜாம்ஷெட்பூர் மற்றும் கொல்கத்தாவில் இது படமாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய பழக்கவழக்கங்களை பின்பற்றி வளர்ந்த ஸ்ரீரேணு திரிபாதி ஆண்மை, தோழமை மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு பற்றிய நீண்டகாலமாக தனது நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்குகிறார். சமூக கட்டுப்பாடுகளுக்கு ஏற்றவாறு தன்னை சுருக்கிக் கொள்ள மறுக்கும் ஒரு உற்சாகமான பெண்ணான மது தனக்கு வரும் வாழ்க்கைத் துணை காதலுடன் மட்டுமல்லாது தன் குணாதிசியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறாள். இவர்கள் இருவரின் பாதையை உள்ளடக்கிய கதையாக ‘ஆப் ஜெய்சா கோய்’ உருவாகி இருக்கிறது. இது காதல் கதையாக மட்டுமல்லாமல், ஒரு பெண்ணின் சுயத்தை மீட்டெடுப்பது பற்றிய கதையாகவும் மாறுகிறது.

நடிகர் மாதவனை காதல் ஜானரில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர். ’ஆப் ஜெய்சா கோய்’ திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இதில் பாத்திமா சனா ஷேக் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். விவேக் சோனி (மீனாட்சி சுந்தரேஷ்வர்) இயக்கியுள்ள இந்தப் படத்தை தர்மாடிக் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. மேலும் ஆயிஷா ராசா, மணீஷ் சவுத்ரி மற்றும் நமித் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தனது கதாபாத்திரம் குறித்து நடிகர் மாதவன் பகிர்ந்து கொண்டதாவது, “நான் இதற்கு முன்பு நடித்த எந்தவொரு காதல் கதையையும் போல ‘ஆப் ஜெய்சா கோய்’ இல்லாமல் முழுக்க முழுக்க மனித மனங்களைச் சார்ந்தது. நான் நடித்த மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஸ்ரீரேணுவும் ஒருவர். கம்பேனியன்ஷிப்பிற்காக ஏங்கும் ஒருவர். ஆனால், அதை எப்படிக் கேட்பது என்று கூட தெரியாத உள்ளுக்குள் அதிக உணர்ச்சிவசப்பட்டவர். இந்தப் படம் அதிரடியாக இருக்காது. ஆனால் பொறுமையாகவும், மென்மையாகவும் பார்ப்பவர்களை ஆழமாகப் பாதிக்கும் வகையிலும் இருக்கும். வாழ்க்கையிலோ அல்லது காதலிலோ புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தவர்களிடம் இது எவ்வாறு பேசுகிறது என்ற கருவால் நான் ஈர்க்கப்பட்டேன். ’ஆப் ஜெய்சா கோய்’ உங்கள் சொந்த விதிமுறைகளின்படி வாழத் தொடங்குவதற்கு வயது ஒரு தடையில்லை, நீங்கள் எப்போது வேண்டுமானலும் வாழத் தொடங்கலாம் என்பதை அழுத்தமாக பேசும் கதை” என்றார்.

பாத்திமா சனா ஷேக் பகிர்ந்து கொண்டதாவது, “ஆப் ஜெய்சா கோயி’ படத்தில் நடித்திருப்பது உண்மையிலேயே எனக்கு பாக்கியம். நான் மாதவனின் மிகப்பெரிய ரசிகை! அவருடன் மது கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. நாம் பெரும்பாலும் வலிமை, நம்பிக்கையை ஆண்மையுடன் தொடர்புபடுத்துகிறோம், ஆனால், மது இந்த குணங்களை மென்மை மற்றும் பெண்மையுடன் வெளிப்படுத்துகிறார். இந்தப் படத்தின் மூலம், நான் அன்பின் வெவ்வேறு வடிவங்களை உணர முடிந்தது. எனக்கும் அது தெரபியாக அமைந்தது. தனித்துவமான இயக்குநர் விவேக்குடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. நேர்மையான இந்த கதையில் விவேக், மேடி, நெட்ஃபிலிக்ஸ் மற்றும் தர்மாடிக் என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது எனது கரியரில் முக்கியமான தருணம்” என்றார்.

படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி ருச்சிகா கபூர் ஷேக், டைரக்டர் ஆஃப் ஒரிஜினல் ஃபிலிம்ஸ், நெட்ஃபிலிக்ஸ் இந்தியா பகிர்ந்து கொண்டதாவது, “’ஆப் ஜெய்சா கோய்’ வீழ்ந்த நம்பிக்கைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட மரபுகளுக்கு மத்தியில் துளிர்விடும் காதலைப் பற்றி பேசுகிறது. விவேக் சோனியின் வசீகரிக்கும் காட்சிகளுடன், ஆர். மாதவன், பாத்திமா சனா ஷேக், ஆயிஷா ராசா மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவும் இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளனர். காதல் திரைப்படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற தர்மாடிக் என்டர்டெயின்மென்ட் படத்தை தரத்துடன் தயாரித்துள்ளது” என்றார்.

நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியான ‘டெஸ்ட்’ படம் மூலம் வித்தியாசமான நடிப்பைக் கொடுத்த நடிகர் மாதவன் தற்போது காதல் ஜானருக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார். ’ஆப் ஜெய்சா கோய்’ படத்தில் மென்மையான, உணர்ச்சிபூர்வமான என பல அடுக்குகளைக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மனதைத் தொடும், மரபுகளை மீறும் ஒரு காதல் கதையை பார்க்கத் தயாராகுங்கள் என்பதையே தற்போது வெளியாகியுள்ள டிரைய்லர் உணர்த்துகிறார். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 11, 2025 அன்று ஸ்ட்ரீம் ஆகிறது.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...