HomeCinemaவிஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ ஜூன் 27-ம் தேதி வெளியாகிறது!

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ ஜூன் 27-ம் தேதி வெளியாகிறது!

Published on

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மார்கன்’ உலகம் முழுவதும் ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னணி எடிட்டராக வலம் வந்த லியோ ஜான் பால் இயக்கியுள்ள இப்படம், பரபரப்பும் மர்மமும் கலந்த குற்றவியல் த்ரில்லராக இருக்கப் போகிறது.

முன்னதாக வெளியான முதல் லுக் போஸ்டர் மற்றும் “சொல்லிடுமா” என்ற சிங்கிள் பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது, திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து வருகிறது. மர்மம் மிக்க கதையம்சம் மற்றும் ஆழமான கதாபாத்திரங்களால், படம் பரபரப்பான திரை அனுபவத்தை தர உள்ளது.

மேலும், விஜய் ஆண்டனியின் சித்தப்பா மகன் அஜய் திஷான் இந்த படத்தின் முக்கிய வில்லனாக அறிமுகமாகிறார். தன் நடிப்பால் தமிழ் திரை உலகில் புதிய வில்லனாக முன்னிறைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஆண்டனியுடன் நேரடியாக மோதும் அவரது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

இந்த படத்தில் சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர், பிரிகிதா, தீப்ஷிகா, கலகப்போவது யாரு அர்ச்சனா, கனிமொழி, மற்றும் அந்தகாரம் நடராஜன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். குடும்பம்ங்கள் ரசிக்கக்கூடிய விதத்தில் உருவாகியுள்ள இப்படம், அதே சமயம் த்ரில்லர் தன்மையையும் தக்கவைத்துள்ளது.

‘சூது கவ்வும்’, ‘இன்று நேற்று நாளை’ போன்ற வெற்றிப் படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய லியோ ஜான் பால் இப்படத்தின் இயக்குநராக பணியாற்றி, தனது அனுபவத்தை கதைக்களத்தில் வெளிப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவாளராக யுவா S, கலை இயக்குநராக ராஜா A, மற்றும் இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி பணியாற்றியுள்ளனர்.

மும்பையில் சிறப்பாக படம்பிடிக்கப்பட்ட நீருக்கடியில் எடுக்கப்பட்ட காட்சிகள் மற்றும் தரமான VFX வேலைகள், படத்தை பார்வையாளர்களுக்கு ஒரு கண்கொள்ளா அனுபவமாக மாற்றுகிறது.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this