Wednesday, January 14, 2026
spot_img
HomeCinemaசிறு முதலீட்டுப் படங்கள் எடுக்கக் கூடாது என்றால் அறிமுக இயக்குநர்களுக்கான கதவுகள் அடைபட்டுவிடும்! -‘மிரியம் மா'...

சிறு முதலீட்டுப் படங்கள் எடுக்கக் கூடாது என்றால் அறிமுக இயக்குநர்களுக்கான கதவுகள் அடைபட்டுவிடும்! -‘மிரியம் மா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாலதி நாராயண் பேச்சு

Published on

நடிகை ரேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, மாலதி நாராயண் இயக்கியுள்ள படம் ‘மிரியம் மா.’

வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார்,  அனிதா சம்பத், மாலதி நாராயண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினரோடு தற்போதைய பிக் பாஸ் சீசன் 7-ல் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட விஜய் வர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்வில் படத்தின் இயக்குநர் மாலதி நாராயணன்  பேசும்போது, ‘‘முதலில் நான் இப்படத்தை தயாரிக்கும் எண்ணத்தில் இல்லை. இயக்கவே விரும்பினேன். பின்னர் ஒரு சூழலில் இப்படத்தை தயாரிக்க வேண்டிய நெருக்கடிக்கு  தள்ளப்பட்டேன். மீண்டும் படம் தயாரிப்பேனா என்று தெரியாது.  ஆனால்  கண்டிப்பாக படம் இயக்குவேன்.

 

இங்கு நடிகர் எழில் சிறுமுதலீட்டுப் படங்கள் எடுக்க வேண்டியதில்லை என்று யாரோ பேசியதைக் குறித்துப் பேசினார்.  சிறு முதலீட்டுப்படங்களே எடுக்கக் கூடாது என்று கூறினால் அறிமுக இயக்குநர்களுக்கான எல்லா கதவுகளும் அடைபட்டுவிடும். ஏற்கனவே படம் செய்த இயக்குநர்கள் மட்டும்தான் திரும்ப திரும்ப படம் செய்வார்கள். என்னுடைய அளவிற்கு இது பெரிய முதலீட்டுப் படம் தான். எனக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக இருந்த என் குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள். படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

நடிகை ரேகா பேசும் போது, “முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதை நினைக்கும் போது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.  இப்படி ஒரு வாய்ப்பை எனக்குக் கொடுத்த அந்தக் கடவுளுக்கும், பத்திரிக்கை நண்பர்களாகிய உங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். ஒரு படத்தில் நாம் நடித்த கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி நம்மை யாராவது அழைக்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கும்.  தமிழில் ஜெனிபர் டீச்சர்,  ரஞ்சனி, உமா போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு அப்படி அமைந்தது. அது போல் மலையாளத்தில் ராணி, மீனுக்குட்டி போன்ற கதாபாத்திரங்கள் பேர் சொல்வது போல் அமைந்தது. அந்த வரிசையில் கண்டிப்பாக இந்த மிரியம்மாவும் இடம் பெறும் என்று நம்புகிறேன்.

செல்போனில் இயக்குநர் கதை சொல்லும் போதே என் மனதில் பட்டாம்பூச்சி பறக்கத் துவங்கிவிட்டது. இந்த கதாபாத்திரத்தில் ஏதோவொன்று இருக்கிறது, விட்டுவிடாதே என்று என் மனம் குதூகலித்தது.  இந்தப் படத்தில் நடிப்பதற்கு  வாய்ப்பளித்த இயக்குநருக்கு என் நன்றிகள். இப்படத்தில் நான் எழிலுக்கு தாயாக நடித்திருக்கிறேன். எங்களுக்குள் அந்த பாண்டிங் வந்தால் தான் காட்சிகள் இயல்பாகத் தெரியும். ஆனால் நான் பல படங்களில் நடித்த சீனியர் என்பதால் எழில் ஆரம்பத்தில் விலகியே இருந்தான். பின்னர் நான் அவனை டேய் இங்க வாடா’ என்று உரிமையாக அழைத்துப் பேசத் துவங்கியதும் எழில் இயல்பாகி விட்டான். காட்சிகளும் அருமையாக வந்திருக்கின்றது.

நான் நடித்த சில கதாபாத்திரங்கள் சற்று திமிர்பிடித்த கதாபாத்திரங்கள் என்பதால் என்னைப் பார்ப்பதற்கு அப்படித் தெரியும். ஆனால் நான் உண்மையில் அப்படி இல்லை.  என்னைப் போன்ற நடிகைகளுக்கு இப்பொழுது பணம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து எங்களை நிருபிக்க விரும்புகிறோம்.  நாற்பது வயது ஆகிவிட்டாலே கறிவேப்பிலையை தூக்கி எறிவது போல் எங்களை எறிந்துவிடுகிறார்கள். கமர்ஸியல் திரைப்படங்களால் கதாநாயகிக்கான முக்கியத்துவம் போய் விட்டது.

எல்லோரும் என்னை ஃபாரினில் சென்று செட்டில் ஆகிவிட்டீர்களா? என்று கேட்கிறார்கள். நான் எப்பொழுதுமே சென்னையில் இருக்கவே விரும்புகிறேன். நிறைய திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை. நீங்கள் ஆதரவு தந்து படத்தை வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

படக்குழு:- பாடல்களுக்கு ஏ.ஆர். ரெஹானா இசையமைத்திருக்கிறார்.  மூன் ராக்ஸ் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் பின்னணி இசை அமைத்திருக்கிறார்கள். ஜேஷன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கையாள, யாத்திசை புகழ் ரஞ்சித் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.

Latest articles

திகிலான பொழுதுபோக்குடன் 2026-ம் ஆண்டை துவங்கிய ZEE5… ஜீவா, ஆண்ட்ரியா பங்களிப்ப்பில் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம்!

ZEE5 தமிழ், 2026-ம் ஆண்டை மிகச் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அதிரடியான திகில் நிறைந்த திரில்லர்கள் மற்றும் அதிரடி...

பயர் கார்த்திக் இயக்கத்தில் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவான ‘M G 24’ பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

அறிமுக இயக்குநர் பயர் கார்த்திக் இயக்கியுள்ள 'M G 24' படத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான பிரணவ்...

பைசன் திரைப்படத்திற்கு Letterboxd தளம் மூலம் சர்வதேச அங்கீகாரம்!

சர்வதேச திரைப்பட விமர்சன தளம் Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் பைசன் திரைப்படம் டாப் 10 ஆக்சன்...

More like this

திகிலான பொழுதுபோக்குடன் 2026-ம் ஆண்டை துவங்கிய ZEE5… ஜீவா, ஆண்ட்ரியா பங்களிப்ப்பில் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம்!

ZEE5 தமிழ், 2026-ம் ஆண்டை மிகச் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அதிரடியான திகில் நிறைந்த திரில்லர்கள் மற்றும் அதிரடி...

பயர் கார்த்திக் இயக்கத்தில் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவான ‘M G 24’ பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

அறிமுக இயக்குநர் பயர் கார்த்திக் இயக்கியுள்ள 'M G 24' படத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான பிரணவ்...

பைசன் திரைப்படத்திற்கு Letterboxd தளம் மூலம் சர்வதேச அங்கீகாரம்!

சர்வதேச திரைப்பட விமர்சன தளம் Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் பைசன் திரைப்படம் டாப் 10 ஆக்சன்...
error: Content is protected !!