HomeCinemaகாதலர் தினத்தில் 'மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்' வெப் சீரிஸ் ஆஹா ஓடிடி'யில் தொடங்கியது!

காதலர் தினத்தில் ‘மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்’ வெப் சீரிஸ் ஆஹா ஓடிடி’யில் தொடங்கியது!

Published on

காதலர் தினமான இன்று ஆஹா தமிழ் ‘மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்’ என்ற புதிய வெப் சீரிஸ்  மூலம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காதலைக் கொண்டு வருகிறது.

மதுரை பையனுக்கும் சென்னைப் பெண்ணுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகளை ஆராயும் ஒரு மனதைக் கவரும் வெப் சீரிஸ் ஆக தயாரிக்கப்பட்டுள்ளது. மோதலில் தொடங்கும் இவர்களது தவிர்க்க இயலாத நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. காதலில் இணைய முடியாதபடி இரண்டு கதாபாத்திரங்கள் குறுக்கே வர, காதல் கை கூடியதா இல்லையா என்ற கதைக்களத்தை காமெடி கலந்த ஒரு நகைச்சுவை பேக்கேஜாக திரைக்கதை அமைந்துள்ளது.

பிரபல இணைய மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஏஞ்செலின் இந்த தொடரின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவருக்கு இணையாக தொடரின் நாயகனாக கண்ணா ரவி நடிக்கின்றார் .இவர்களுடன் ரேணுகா , குரேஷி, ஷ்யாமா ஷர்மி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

விக்னேஷ் பழனிவேல் இயக்கும் இந்த வெப் சீரிஸ் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காதலர் தினமான இன்று இரவு 7 மணி முதல் ஆரம்பமாகிறது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய எபிசொட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காணத் தவறாதீர்கள் காதலை கொண்டாடும் இந்த தொடரை.

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this