HomeCinemaகபிலன் வைரமுத்துவின், ஆகோள் நாவலின் இரண்டாம் பாகமான 'மாக்கியவெல்லி காப்பியம்' நூலினை வெளியிட்டார் இயக்குநர் பாரதிராஜா!

கபிலன் வைரமுத்துவின், ஆகோள் நாவலின் இரண்டாம் பாகமான ‘மாக்கியவெல்லி காப்பியம்’ நூலினை வெளியிட்டார் இயக்குநர் பாரதிராஜா!

Published on

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியம் என்ற நாவலை இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார். இது 2022-ம் வெளியான ஆகோள் என்ற நாவலின் இரண்டாம் பாகம்.

பிரிட்டிஷ் இந்தியாவின் குற்றப் பரம்பரை சட்டத்தையும் அதன் நவீன பரிணாமங்களையும் விவாதிக்கும் முறையில் கபிலன் வைரமுத்து இரண்டு நாவல்களையும் எழுதியிருக்கிறார்.

முதல் பாகத்தில் பன்னிரண்டு வயது சிறுவனாக இருந்த மாக்கியவெல்லி இரண்டாம் பாகத்தின் மைய கதாபாத்திரமாக வருகிறான். மதுரை மாவட்டத்துக்குட்பட்ட எட்டு நாடுகள் என்ற பகுதியில் கதை நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 1801 தொடங்கி 2057 வரையிலான காலக்கட்டத்தின் கதையாக இது எழுதப்பட்டிருக்கிறது.

பல வரலாற்று தகவல்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை குறித்த இரண்டு ஆண்டுகள் கள ஆய்வுக்கு பின் கபிலன்வைரமுத்து இந்த நாவலை எழுதியிருப்பதாக பதிப்பாளர் வேடியப்பன் குறிப்பிட்டிருக்கிறார்.

இஸ்ரேல் அரசு இணையவெளியில் மேற்கொண்ட முக்கியமான முன்னெடுப்புதான் இந்த இரண்டாம் பாகத்திற்கான முதல் பொறி என்று கபிலன்வைரமுத்து தன் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

நாவலுக்கென்று பிரத்யேகமாக மூல் என்ற கணினி மொழி உருவாக்கப்பட்டிருக்கிறது. மாக்கியவெல்லி காப்பியம் நூலை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் வருகிற அக்டோபர் 06ஆம் தேதி சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் வளாகத்தில் ஆசிரியர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.

மாக்கியவெல்லி காப்பியம் கபிலன்வைரமுத்துவின் பன்னிரண்டாவது நூல். ஐந்தாவது நாவல். ஆகோள் முதல் பாகம் ஆங்கிலத்திலும் வெளி வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

கதையின் நாயகனாக விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் அறிமுக விழா! 

விக்கல்ஸ் விக்ரம் ஸ்டாண்ட் அப் காமெடியன் - பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என...

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – TN 2026′ மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக்...

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=iFv3N9mX5gU நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும்...

சிறப்புப் பாடல் மூலம் உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் கெவி படக்குழு!

தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆர்ட்அப்டிரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான ‘கெவி’ திரைப்படத்தில், கிராமி விருது வென்ற Ricky...

More like this