HomeMovie Reviewலாரா சினிமா விமர்சனம்

லாரா சினிமா விமர்சனம்

Published on

இன்வெஸ்டிகேஷன் திரில்லரில் இன்ட்ரெஸ்டிங் ஸ்கிரீன்பிளே.

தன் மனைவியைக் காணவில்லை என லாரன்ஸ் என்பவர் புகார் கொடுக்க, அவன் கொடுத்த அங்க அடையாளங்கள் போலீஸ் கைக்கு கிடைத்த பெண்ணின் சடலத்துடன் ஒத்துப் போகிறது. ஆனால், அது தன் மனைவியில்லை என அவன் மறுக்க போலீஸுக்கும் படம் பார்க்கும் நமக்கும் ‘இறந்த பெண் யார்?’ ‘காணாமல் போன பெண்ணுக்கு என்னவானது?’ என்ற குழப்பம் உருவாகிறது. அதற்கான பதில்களை போலீஸ் கண்டறியும்போது பல ஆச்சரியங்களும் சில அதிர்ச்சிகளும் காத்திருக்கிறது.

சம்பளம் தரும் முதலாளிக்காக முறைகேடான வேலைகளில் ஈடுபடுவது, அவருக்காக தன் மனைவியியை தவறாக அணுகுவது என டெரராகவும் முகம் சுளிக்க வைக்கும்படியும் கேரக்டரை உள்வாங்கி நடித்துள்ளார் லாரன்ஸாக வருகிற பாலா.

இன்ஸ்பெக்டராக வருகிறார் இந்த படத்தை தயாரித்திருக்கிற கார்த்திகேசன். துப்பு துலக்குவதில் அவசரம் காட்டாமல், நிதானமான விசாரணை மூலம் குற்றவாளிகளை நெருங்குகிற விதம் கதையின் நகர்வுக்கு சுறுசுறுப்பூட்டுகிறது.

படத்தின் பின்பகுதியில் வருகிற அசோக் காதல் உணர்வையும் காதலியைப் பிரிகிற நிலையில் வேதனையையும் கச்சிதமாக பிரதிபலித்திருக்க, அவருக்கு ஜோடியாக வருகிற அனுஸ்ரேயா பிரியமான காதலியாகவும் குறிப்பிட்ட கொள்கையின் வழி துணிச்சலாக நடக்கிற விதம் கவனம் பெறுகிறது.

கணவனின் சித்ரவதைகளில் மனம் உடைந்து ஒரு கட்டத்தில் விட்டு விலக நினைத்து கதையின் திருப்பத்துக்கு கை கொடுக்கிற வெண்மதி, பாலியல் தொழிலாளிகளின் சிக்கல்களை போகிற போக்கில் தொட்டுக் காட்டுகிற வர்ஷினி வெங்கட், ஆர்வக் கோளாறில் வாலிபத் திமிரில் சிறிய தவறு செய்து பெரிய குற்றத்தில் சிக்குகிற இ எஸ் பிரதீப், திலீப்குமார், எம் எல் ஏ.வாக மேத்யூ வர்கீஸ் என மற்றவர்கள் அவரவர் கேரக்டரை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

பாடல்களை ரசிக்கும்படியும் பின்னணி இசையை குறை சொல்ல முடியாதபடியும் வழங்கியிருக்கிறார் ரகு ஸ்வரன். காரைக்காலின் சுற்றுவட்டத்தை சுற்றி வளைத்திருக்கிறது ஆர் ஜே ரவீனின் ஒளிப்பதிவு.

மனித மனங்களின் அழுக்கான பக்கங்களில் நுழைந்து விபரீத வில்லங்க கதையை உருவாக்கி,

கிட்டத்தட்ட ஒரே வயதுப் பெண்கள் மூன்று பேர், அவர்களுக்குள் ஒரேயொரு ஒற்றுமை என சித்தரித்து,

அடுத்து என்ன அடுத்து என்ன என எதிர்பார்ப்பைத் தூண்டும் விதமாக திரைக்கதை அமைத்து,

புதுமுகங்களை நேர்த்தியாக நடிக்க வைத்து லாராவை ஜோரான இன்வெஸ்டிகேஷன் திரில்லராக்கியிருக்கிறார் இயக்குநர் மணி மூர்த்தி!

Rating 3 / 5

Latest articles

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் ப்ரோமோ.

https://www.youtube.com/watch?v=tMzHwOWtLuE முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து...

உத்சவ் 2026 விழாவில் ‘தேவி ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்ட ரவி மோகன்; ரசிகர்களைக் கவர்ந்த கெனீஷாவின் அதிரடி இசை நிகழ்ச்சி!

பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது....

இயக்குநர் பாபு விஜய் கதைக்குத் தேவையான இடத்தில் ஹீரோயிசத்தையும், கதையின் எடையையும் சமநிலைப்படுத்தி எடுத்திருக்கிறார்! – ‘சட்டென்று மாறுது வானிலை’ பட விழாவில் நடிகர் ஜெய் பேச்சு

ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் 'சட்டென்று மாறுது வானிலை.' இயக்குநர்...

நடிகர் விஷால் செய்ய முயற்சித்ததை முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்து முடித்தார்!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் விஷால், நடிகர் சங்கத்தை வழி நடத்தும் பெரும் பணியை...

More like this