HomeGeneralஇயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட 'லெனின் பாண்டியன்' படத்தின் டிரெய்லர்!

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்!

Published on

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும் அழுத்தமான படைப்பாக, மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள லெனின் பாண்டியன் படத்தின் டிரெய்லரை முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

ஜனநாயக நாட்டில் எவர் ஒருவருக்கும் எந்த காரணத்தை முன்னிட்டும், எந்த அதிகாரத்தாலும், ஒருவரது தனிப்பட்ட உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்படக்கூடாது பறிக்கப்படக்கூடாது. அதை காப்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படை. கிராமத்து பின்னணியில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் அது போன்ற பிரச்சனை தான் இப்படத்தின் மையம்.

தற்போது வெளியான டிரெய்லர், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்த இந்நாட்டில், ஒரு 75 வயது முதியவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பது காட்டப்படுகிறது. இது ஏன் எதற்காக அவருக்கு போலீஸ் பாதுகாப்பு எனும் ஆர்வத்தை தூண்டுகிறது டிரெய்லர். நம் மண்ணின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருக்கும் இந்தக் கதை, ஒரு புது அனுபவமாக இருக்கும் என்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது. ஆர்வத்தை தூண்டும் டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசாக நடிகர் தர்ஷன் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். பன்முக திறமையாளர் கங்கை அமரன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை ரோஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இப்படம் மூலம் திரைக்க்கு மீண்டும் வருகிறார். ஸ்ரித்தா ராவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன், ஜார்ஜ் மரியம், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், பிக் பாஸ் அர்ச்சனா, ஜெயப்பிரகாஷ், போஸ் வெங்கட், இளவரசு ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் திட்டமிடப்பட்டு வருகிறது.

செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் TG தியாகராஜன் வழங்குகிறார். இணை தயாரிப்பு – G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த்

Latest articles

‘டோரதி’ திரைப்படத்தில் வில்லன் அவதாரத்தில் மிரள வைத்த நடிகர் சௌந்தரராஜா!

'சுந்தரபாண்டியன்', 'ஜிகர்தண்டா', கடைக்குட்டி சிங்கம், பிகில் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து, கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக...

சாராயம், போதை வஸ்துகள், காவல் துறை நுழையாத ஊர்… ஊரைக் கெடுத்து காதலர்களைப் பிரிக்கத் துடிக்கும் வில்லன்… பரபரப்பான உருவான ‘மானிடன்’ விரைவில் திரைக்கு வரவுள்ளது!

விரைவில் திரைக்கு வரவிருக்கிறது 'ஜேம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ்' ஜார்ஜ் வில்லியம்ஸ் தயாரிப்பில், பல படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய...

ஆல்பாஸ் சினிமா விமர்சனம்

திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்னு வந்துச்சாம் யோகம் என்பது போல் மூன்று எளிய குடும்பங்களிடம் 5 கோடி ரூபாய் சிக்குகிறது....

தாய் நிலம் சினிமா விமர்சனம்

இலங்கைத் தமிழர்கள் குறித்த படைப்புகளின் வரிசையில் குண்டு வெடிப்பு, பாலியல் கொடுமைகள் என பழக்கப்பட்ட விஷயங்களைத் தவிர்த்து உருவாகியிருக்கும்...

More like this