HomeCinemaலெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் 'லீடர்' படத்தின் அதிரடியான கிளிம்ஸ் வெளியானது! 

லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் ‘லீடர்’ படத்தின் அதிரடியான கிளிம்ஸ் வெளியானது! 

Published on

லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘லீடர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’, ‘கருடன்’ ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ள ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவருவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் கதை குறித்து விவரித்த படக்குழுவினர், “நிழல் உலகத்திற்கும் காவல் துறைக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் ஒரு சாமானியன் சிக்கிக்கொள்கிறான். அதன் தீவிரத்தில் இருந்து அவன் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் எவ்வாறு காப்பாற்றிக் கொண்டு தப்பிக்கிறான் என்பதே லீடர்” என்றனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கி ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று சென்னையில் நிறைவுற்றது. மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் என அனைத்து சுவாரசிய அம்சங்களும் நிறைந்து இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் இப்படம் இருக்கும்.

‘லீடர்’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால், பாகுபலி பிரபாகர், அமிர்தா ஐயர், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா, அறந்தாங்கி நிஷா, குழந்தை நட்சத்திரம் இயல், ஜெயஸ்மிர்தா, பத்மன், யோகிராம், ஓ ஏ கே சுந்தர், மகாநதி ஷங்கர், மரியம் ஜார்ஜ், “ஆதித்யா” கதிர், வேல் அருணாச்சலம், நிரஞ்சன், ஷோபன் பாபு, அசோக் பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட‌ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைக்கிறார். எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பை கையாளுகிறார். சண்டை பயிற்சி: மகேஷ் மேத்யூ; கலை இயக்கம்: ஜி. துரைராஜ்; உடைகள் வடிவமைப்பு: தீப்தி ஆர் ஜெ, பூர்த்தி பிரவின்; உடைகள்: பி. ரங்கசாமி; ஒப்பனை: என். சக்திவேல், அப்துல், ஹர்ஷா கார்த்திக், மூவேந்தர், ரஞ்சித்; சிகை அலங்காரம்: ஜெ. தனசேகரன், அசால்ட் கணேஷ், ஷர்மிளா, ஷிவராஜ்; டப்பிங்: Knack, ஜி. கோதாண்டன், ஜி. விஷ்ணுவர்தன்; வி எஃப் எக்ஸ்: ஃபேந்தம் எஃப் எக்ஸ்; அனிமேஷன்: அம்பானி என் எஸ் கே; டி ஐ: எல் வி பிரசாத் ஸ்டூடியோஸ்; கலரிஸ்ட்: ரங்கா; மிக்சிங்: டி. உதய்க்குமார்; எஸ் எஃப் எக்ஸ்: ஏ. சதீஷ் குமார்; பாடல்கள்: கபிலன், விவேகா; நடனம்: சங்க‌ரையா டி; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

Latest articles

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...

Over 100 Plastic Surgeons from Across India Gather in Chennai to Mark World Plastic Surgery Day!

Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition Liposuction Masterclass and Public Awareness...

More like this