HomeCinemaயோகிபாபு, ராஜ் ஐயப்பா நடிக்க எம்ஆர் பிக்சர்ஸ், ஏ. மகேந்திரன் தயாரிக்கும் 'லவ் இங்க்' இறுதிக்கட்ட...

யோகிபாபு, ராஜ் ஐயப்பா நடிக்க எம்ஆர் பிக்சர்ஸ், ஏ. மகேந்திரன் தயாரிக்கும் ‘லவ் இங்க்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு!

Published on

நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தயாரிக்கும் முனப்பிலிருக்கிற எம்ஆர் பிக்சர்ஸ், ஏ. மகேந்திரன் தயாரிக்கும் படம் ‘லவ் இங்க்.’

இந்த படத்தில் ராஜ் ஐயப்பா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். சரியான திட்டமிடலுடன் குறுகிய காலத்தில் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை இயக்குநர் மேகராஜ் தாஸ் நேர்த்தியாக படமாக்கியுள்ளார். இப்போது படத்தின் எம்ஆர் பிக்சர்ஸ், ஏ. மகேந்திரன் தயாரிக்கும் படம் ‘லவ் இங்க்.’ சுனில் ரெட்டி, கேபிஒய் ராமர், ரவி மரியா ஆகியோரும் இணைந்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, “படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே சரியான திட்டமிடல் இருந்ததால் எளிதில் எங்களால் படப்பிடிப்பை முடிக்க முடிந்தது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம். படப்பிடிப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தொடங்கியுள்ளது. நடிகர் சுனில் ரெட்டி வில்லனாக நடிக்கிறார்” என்றார்.

அஜித் குமாரின் ‘வலிமை’, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெப் சீரிஸ் ‘உப்பு புளி காரம்’ ஆகியவற்றில் தனது அற்புதமான நடிப்பிற்காக ராஜ் ஐயப்பா பாராட்டப்பட்டார். பல சீரியல்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த டெல்னா டேவிஸ் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

பட்டிமன்றம் ராஜா, மாறன், சுபாஷினி கண்ணன், கேபிஒய் வினோத், டிஎஸ்ஜி (‘மார்க் ஆண்டனி’ பட வில்லன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்), மவுரிஷ் தாஸ், வினோத் முன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒரு சில திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய மேகராஜ் தாஸ் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படம் ஃபீல்-குட் ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகிறது. நடிகர் யோகி பாபு இந்த படத்தில் டாக்டராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது நடிப்பு நிச்சயமாக ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தும்.

படக்குழு:-
ஒளிப்பதிவாளர்: அர்ஜுன்
கலை: வி. ராமு தங்கராஜ்
படத்தொகுப்பு: கிருஷ்ணன் சுதர்ஷன்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்

Latest articles

‘டீகன்ஸ்ட்ரக்ட்’ (Deconstruct) நிறுவனத்தின் பிராண்ட் பார்ட்னர் ராக் ஸ்டார் அனிருத்!  

'டீகன்ஸ்ட்ரக்ட்' இசையமைப்பாளர் அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவிக்கிறது. இணையதளத்தின் மூலம் இயல்பாக தூண்டப்பட்ட ஒரு கதை. நவீன...

தண்ணீருக்கடியில் 20 அடி ஆழத்தில் மொத்த சக்தியையும் பயன்படுத்திய ஆர்யா… ‘மிஸ்டர் X’ படத்தில் அதிரடி காட்சி!

நடிகர் ஆர்யா 'மிஸ்டர் X’ படத்திற்காக 20 அடி ஆழமுள்ள தண்ணீருக்கடியிலான அதிரடி காட்சியில் மொத்த சக்தியையும் பயன்படுத்தியிருக்கிறார். இதுபற்றி...

வீர அன்பரசு நடித்து இயக்கியுள்ள ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ தேர்தலுக்கு மறுநாள் ரிலீஸ்! 

வீர அன்பரசு கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.'...

அஜித் – ஷாலினி நடித்த கமர்ஷியல் பிளாக்பஸ்டர் ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ்!

அஜித் குமாரின் 25வது திரைப்படமாகவும் அவரது கரியரில் முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்த இந்தப் படம் ஏப்ரல் 24 அன்று...

More like this