HomeCinemaடிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நவம்பர் 10-ம் தேதி ஜெய், தன்யா ஹோப் நடிக்கும் ‘லேபில்' வெப்...

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நவம்பர் 10-ம் தேதி ஜெய், தன்யா ஹோப் நடிக்கும் ‘லேபில்’ வெப் சீரிஸ் ரிலீஸ்!

Published on

ஜெய், தன்யா ஹோப் நடித்துள்ள வெப் சீரிஸ் ‘லேபில்.’ மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இது வித்தியாசமான களங்களில், அழுத்தமான படைப்புகளை வழங்கி வரும், இயக்குநர் அருண்ராஜா இயக்கும் முதல் வெப் சீரிஸ் என்பதால், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. திரைக்கதையையும் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்திருப்பதுடன், பொது பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதையடுத்து இந்த வெப் சீரிஸ் வரும் நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளது. யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட நான்கு பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதியுள்ளனர்.

சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.

Latest articles

உற்சாகமாக நடந்த, பவிஷ் நாராயணன் நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

பவிஷ் நாராயணன் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் 15.6.2026 அன்று சென்னையில் நடந்தது....

பவிஷ் நாராயணன் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் 15.6.2026 அன்று சென்னையில் நடந்தது....

கரு. பழனியப்பன் இயக்கும் ‘குக்கர்’ திரைப்படத்தின் தலைப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்!

கரு. பழனியப்பன் இயக்கும் 'குக்கர்' திரைப்படத்தின் தலைப்பை இன்று (15-06-2026) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின்...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல; நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… -நடிகர் சௌந்தரராஜா 

நடிகர் செளந்தரராஜா, தன்னுடைய மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம்...

More like this