HomeCinemaடிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக 'லப்பர் பந்து' சூப்பர்ஹிட் திரைப்படம்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக ‘லப்பர் பந்து’ சூப்பர்ஹிட் திரைப்படம்!

Published on

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது சந்தாதாரர்களுக்குத் தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் திரைப்படமான லப்பர் பந்து திரைப்படத்தினை அக்டோபர் 31 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.

லப்பர் பந்து திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவ தர்ஷினி, ஜென்சன் திவாகர் மற்றும் டிஎஸ்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ஒரு சிறு கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் விளையாடும் இரண்டு கிரிக்கெட் காதலர்களின் ஈகோவைச் சுற்றி நடக்கும் ஒரு எளிய ஸ்போர்ட்ஸ் டிராமாவாகத் தொடங்கும் இந்தத் திரைப்படம், சத்தமில்லாமல் சமூகத்தில் ஆழமான வேரூன்றியிருக்கும் சாதி, பணம் எனப் பல வேறுபாடுகளை, அடுக்குகளைக் கடக்க, விளையாட்டு ஒரு கருவியாக மக்களுக்கு உதவும் என்பதைக் காட்டுகிறது.

திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம், தமிழ்நாட்டின் வேலூர்-ஆம்பூர் பகுதியில் படமாக்கப்பட்டது மற்றும் இப்படம் ரசிகர்கள், பொது மக்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவராலும் முழு மனதுடன் பாராட்டப்பட்டது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான லப்பர் பந்து திரைப்படத்தில் ஒளிப்பதிவு தினேஷ் புருஷோத்தமன், இசை ஷான் ரோல்டன், படத்தொகுப்பு மதன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

Latest articles

கிராமத்து மக்கள் வெளியிட்ட ‘என்ன விலை’ திரைப்படத்தின் முதல் பார்வை!

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் முதல் பார்வையை பெரும்பாலும் பிரபலங்களோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ வெளியிடுகின்றனர். ஆனால், இதற்கு மாறாக...

ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் நடிக்கும் ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

'96' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, பிரபலமான நடிகர் ஆதித்யா பாஸ்கர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில்...

விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். தமிழ் சினிமாவில் தரமான மற்றும்...

அந்தரன் சினிமா விமர்சனம்

தொடர் மரணங்கள் நடக்கிற திக்திக் திரில்லராக 'அந்தரன்.' நாயகியை திருமணம் செய்துகொள்ளத் தயாராகிற இளைஞர்கள் ஒவ்வொரு விதமாக இறக்கிறார்கள். அதற்கெல்லாம்...

More like this