HomeCinemaதுல்கர் சல்மான், வெங்கி அட்லூரி கூட்டணியின் அதிர வைக்கும் 'லக்கி பாஸ்கர்' படத்தின் டைட்டில் ட்ராக்!

துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி கூட்டணியின் அதிர வைக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் டைட்டில் ட்ராக்!

Published on

துல்கர் சல்மான், ஒரு சாதாரண மனிதரான ‘லக்கி பாஸ்கரி’ன் அசாதாரண கதையுடன் இந்த முறை வருகிறார். ஜூலை 28ம் தேதி நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் டிராக் வெளியாகியுள்ளது.

1980களின் பிற்பகுதிக்கும் 1990களின் முற்பகுதிக்கும் நம்மை அழைத்து செல்லும் இந்த இசை ரசிகர்களுக்கு போதை தருகிறது என்றால் மிகையில்லை. இசைக்கருவிகளின் பயன்பாடு மற்றும் அனைத்திற்கும் மேலாக, பழம்பெரும் பாடகி உஷா உதுப்பின் குரல் இந்த ட்ராக்கை ஒரு ராக்கிங் நாஸ்டால்ஜிக்காக மாற்றி இருக்கிறது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், 1980களின் இண்டி-ராக்கை தற்போதைய தலைமுறை உணர்வுகளுடன் இணைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளார். இந்த காலத்திற்கான புதிய டிராக் போல, மொழி தடைகளைக் கடந்து இசை ரசிகர்களின் பிளேலிஸ்ட்களில் இந்த இசை இடம் பிடித்திருக்கிறது.

பிளாக்பஸ்டர் எழுத்தாளர்-இயக்குநர் வெங்கி அட்லூரி, மறக்கமுடியாத மற்றொரு வெற்றிப் படத்தை துல்கர் சல்மானுக்குக் கொடுக்க இருக்கிறார்.

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சியும், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சாய் சௌஜன்யாவும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்கள். ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை வழங்குகிறது.

மூத்த புரொடக்ஷன் டிசைனர் வங்காளன், எண்பதுகளின் மும்பையை மீண்டும் கண் முன்னே உருவாக்கியுள்ளார். படத்திற்காக அவரது பணிக்கு விருதுகள் கிடைக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி தனது ஒளிப்பதிவு மூலம் படத்திற்கு மேலும் அழகு சேர்த்து, இயக்குநரின் கதைக்கு உயிர் கொடுத்துள்ளார்.

தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் நவின் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. படம் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this