HomeUncategorizedகாக்கி சர்க்கஸ் வெப் சீரிஸ் விமர்சனம்

காக்கி சர்க்கஸ் வெப் சீரிஸ் விமர்சனம்

Published on

திருடனைப் பிடித்து சிறையில் அடைப்பது வழக்கம். இந்த கதையில் ஒரு திருடன் சிறையிலிருந்து ஒன்றரை லட்ச ரூபாயை திருடுகிறான்.

திருடுவதுதான் நோக்கம் என்றால் வேறெங்காவது போய் திருடலாம். பல அடுக்கு பாதுகாப்புள்ள சிறைக்குள் புகுந்து திருட வேண்டிய அவசியம் என்ன? திருடியவன் யார்? பாதுகாப்புகளை மீறி அவன் எப்படி திருடினான்? என்பதையெல்லாம் ஜெயிலரும், சப் ஜெயிலருமாக சேர்ந்து எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதே காக்கி சர்க்கஸின் ஸ்க்ரீன்பிளே

குற்றவாளி யார் என தெரிந்தும், அவனை சட்டப்படி எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிற சப் ஜெயிலராக சுபாஷ் செல்வம், லட்சணமாக இருக்கும் அவர் முகத்தில் பரபரப்பையும் டென்சனையும் காட்டியிருக்கும் விதம் இயல்பாக இருக்கிறது. காதல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.

இப்படியொரு சாதுவான ஜெயிலரை இதுவரை எந்த சிறைச்சாலையும் பார்த்திருக்க முடியாது. அப்படியொரு வித்தியாசமான ஜெயிலராக வருகிற முனீஸ்காந்த், புத்தகங்களை வாசிக்க வைத்து குற்றவாளிகளுக்குள் நல்லெண்ணம் உருவாக வழி வகுப்பது தனித்துவம்.

வித்தியாசமான நோக்கத்துக்காக திருடுவது, திருடிவிட்டு, அமாம் நான்தான் திருடினேன்; உன்னால என்னை என்ன பண்ண முடியும் என ஜெயிலரிடம் கெத்து காட்டுவது என ராஜேஷ் மாதவன் உடல்மொழியால் கவனம் பெறுகிறார்.

வின்ஸு ரேச்சல் ஷாமுக்கு ஹீரோ சுபாஷை காதலிக்கும் வேலை. அதை அழகாக, அளவாக செய்திருக்கிறார். அப்துல் லீ சவப்பெட்டி தயாரித்து விற்பனை செய்வதில் ஒரு விபரீதத்தை சந்தித்து அவதிப்படுபவராக கவனம் பெறுகிறார். மற்ற நடிகர் நடிகைகள் கதைக்கு தேவையானபடி நடித்திருக்க, விபின் பாஸ்கரின் பின்னணி இசை திரைக்கதையின் போக்கிற்கேற்ப பயணித்திருக்கிறது.

சிறைச்சாலை, பேருந்து நிலையம், சம்பவங்கள் நடக்கும் ஊரின் ஒருசில பகுதிகளை கண்கவரும் விதத்தில் பதிவு செய்திருக்கிறது ஒளிப்பதிவாளர் நீரஜ் ரெவியின் கேமரா.

இயக்குநரும் சரி, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஹீரோயின் என பலரும் கேரளாவை ச் சேர்ந்தவர்கள். மலையாள இயக்குநர்கள் சிறிய ஒன்லைனை எடுத்துக்கொண்டு திரைக்கதையை சுவாரஸ்யபடுத்துவதில் கில்லாடிகள். அவர்களில் ஒருவரான அமீன், திருடன் ஒருவனை பிடிக்க களமிறங்கும் போலீஸ் என்ற ஒருவரியை எடுத்துச் கொண்டு, சுவாரஸ்யங்களும் திருப்பங்களும் கலந்துகட்டிய திரைக்கதை அமைத்து, பார்வையாளர்களுக்கு வித்தியாசமான, திருப்தியான அனுபவம் தருகிறார்.

இந்த வெப் சீரிஸ் ஏப்ரல் 10; 2026-லிருந்து ZEE5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.

Rating 3.5 / 5

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this