HomeCinemaநடிப்பு, இசை இரண்டிலும் ஜீவி பிரகாஷ் தந்த அர்ப்பணிப்பு பெரிது! -'கள்வன்' பட இயக்குநர் பெருமிதம்

நடிப்பு, இசை இரண்டிலும் ஜீவி பிரகாஷ் தந்த அர்ப்பணிப்பு பெரிது! -‘கள்வன்’ பட இயக்குநர் பெருமிதம்

Published on

ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகும் ‘கள்வன்’ படத்தில் பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள இந்த பரபரப்பான அட்வென்ச்சர், ஆக்‌ஷன் திரைப்படம் வரும் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

இயக்குநர்களின் கற்பனையை வசீகரிக்கும் காட்சிகளாக மாற்றும் திறமை படைத்தவர்கள் ஒளிப்பதிவாளர்கள். ஆனால், ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் இரண்டிலும் சிறந்து விளங்கும் ஒருவர் படம் இயக்கும்போது நிச்சயம் அது சிறப்பானதாக இருக்கும். அப்படித்தான் ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகும் ‘கள்வன்’ படம் சிறப்பாக வந்துள்ளது.

படம் பற்றி பி.வி. ஷங்கர் பேசியபோது, ​​“சில ஜானர் படங்கள் மொழி மற்றும் பிராந்திய எல்லைகளைத் தாண்டி பார்வையாளர்களைக் கவரும். ஒரு ஒளிப்பதிவாளராக காடுகளை அடிப்படையாகக் கொண்டு வரக்கூடிய படங்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாக உணர்ந்தேன். ஆக்‌ஷன், அட்வென்ச்சர், எமோஷன் எனப் பல த்ரில்லர் தருணங்களை ஒன்றாகக் கொண்ட இந்தப் படம் பார்வையாளர்களுக்குத் தரமான எண்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும். அழகான காதல், நகைச்சுவை என ஒரு ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படத்திற்கான அனைத்து அம்சங்களையும் இந்தப் படம் கொண்டுள்ளது.

இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு சாருக்கு நன்றி. பலதரப்பட்ட ஜானர்களின் அடிப்படையில் பாராட்டத்தக்க பொழுதுபோக்குகளை கொடுக்க வேண்டும் என்ற அவரது ஆர்வத்தின் வெளிப்பாடுதான் இந்தப் படம். அவரிடமிருந்து ஒப்புதல் பெறுவதை விட, நான் கதையாக விவரித்ததை காட்சிப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால், படத்தின் அவுட்புட்டில் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

‘கள்வன்’ படத்திற்காக, ஜி.வி.பிரகாஷ் குமாரின் அர்ப்பணிப்பு அளப்பரியது. ஒரே நேரத்தில் இசை மற்றும் நடிப்பு இரண்டிலும் கவனம் செலுத்துவது எளிதானது கிடையாது. ஆனால், இந்தப் படத்துக்கான இயல்பான நடிப்பு மற்றும் அழகான பாடல்கள் கொடுத்து எங்கள் எதிர்பார்த்ததை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளார். இவானாவும் திறமையான நடிகை. இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். பாரதிராஜா சாருடன் பணிபுரிய வேண்டும் என்பது பலருடைய கனவு. அந்தக் கனவு எனக்கு நிறைவேறி இருப்பதில் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்” என்றார்.

தொழில்நுட்ப குழு:

தயாரிப்பு இல்லம் – ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி,
தயாரிப்பாளர்: ஜி.டில்லி பாபு,
ஒளிப்பதிவு & இயக்கம்: பி.வி. ஷங்கர்,
பாடல்கள் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,
பின்னணி இசை: ரேவா,
எடிட்டிங்: சான் லோகேஷ்,
கலை: என்.கே. ராகுல்

Latest articles

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

ஏன் என்னை ஏதோ செய்தாய் சினிமா விமர்சனம்

கடந்த கால வாழ்க்கை தந்த வலிகளால் குடி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு என கண்டபடி வாழ்கிற நாயகன். ஒரு...

More like this

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....