Sunday, March 15, 2026
spot_img
HomeCinemaநலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் தொடக்க விழா காணொளி வெளியீடு!

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் தொடக்க விழா காணொளி வெளியீடு!

Published on

‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவுடன் தொடங்கியது என்றும், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும்.

கதை சொல்லும் உத்தியில் புதிய பாணியை பின்பற்றி வெற்றி பெற்ற படைப்பாளியான நலன் குமாரசாமி இயக்கத்தில், முதன் முதலாக கார்த்தி இணைந்திருப்பதாலும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சர்வதேச தர முத்திரையுடன் தயாராவதாலும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Latest articles

அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்த அழகான லவ் டிரமா ‘நீ Forever’ மார்ச் 27-ம் தேதி ரிலீஸ்!

இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர்  உருவாகியுள்ள 'தருணம்' என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ்...

வெஞ்சென்ஸ் சினிமா விமர்சனம்

அதிகாரத்தில் இருக்க வேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தனக்கு கீழ் இருக்க வேண்டும், எந்த நேரமும் புகழ் போதையில் மிதக்க...

கெணத்த காணோம் சினிமா விமர்சனம்

வறட்சிக்குப் பேர்போன ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சத்திற்கு தீர்வுகாண கிணறு தோண்டுகிறார்கள். அதிகபட்சம் 20 அடி...

More like this

அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்த அழகான லவ் டிரமா ‘நீ Forever’ மார்ச் 27-ம் தேதி ரிலீஸ்!

இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர்  உருவாகியுள்ள 'தருணம்' என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ்...

வெஞ்சென்ஸ் சினிமா விமர்சனம்

அதிகாரத்தில் இருக்க வேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தனக்கு கீழ் இருக்க வேண்டும், எந்த நேரமும் புகழ் போதையில் மிதக்க...
error: Content is protected !!