HomeCinemaஹங்கேரியில் உருவான, ஜி.வி.பிரகாஷ் - இவானா நடிக்கும் ‘கள்வன்' படத்தின் பின்னணி இசை!

ஹங்கேரியில் உருவான, ஜி.வி.பிரகாஷ் – இவானா நடிக்கும் ‘கள்வன்’ படத்தின் பின்னணி இசை!

Published on

ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா, பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘கள்வன்.’ முன்னணி ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கியுள்ளார்.

படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்கு முந்தைய போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், படத்திற்கான பின்னணி இசையை ரேவா ஹங்கேரியில் நம்பிக்கைக்குரிய இசைக்கலைஞர்கள் குழுவுடன் உருவாக்கியுள்ளார்.

அது குறித்து இசையமைப்பாளர் ரேவா பேசும்போது, ‘‘உணர்வுகள் இந்த படத்தின் மையமாக இருப்பதால், அதற்கான இசையைக் கொடுத்துள்ளோம். எனது பின்னணி இசைக்கு ரசிகர்கள் என்ன மாதிரியான ரெஸ்பான்ஸ் கொடுக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். பல திறமையாளர்களால் உருவாகும் இந்த படத்தில் பணிபுரிவது பெருமையாக இருக்கிறது” என்றார்.

இந்த படத்தில் நக்கலைட்ஸ் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன், நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீனா, பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளதோடு, படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே, இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், இவானா இருவரும் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ ஜி டில்லி பாபு தயாரித்துள்ளார். படம் அடுத்தாண்டின் துவக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this