HomeGeneralஇயக்குநர் வெற்றிமாறன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் 'காலனி' பட ஃபர்ஸ்ட்...

இயக்குநர் வெற்றிமாறன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் ‘காலனி’ பட ஃபர்ஸ்ட் லுக்!

Published on

கோபி நயினார் இயக்கத்தில், ‘கலையரசி’ ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள ‘காலனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர்.
ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற அறம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கோபி நயினார், வெளியீட்டுக்கு தயாராக உள்ள “மனுஷி” படத்திற்கு பின், சமூக அக்கறை மிக்க இன்னொரு அழுத்தமான படைப்பாக “காலனி” படத்தை உருவாக்கியுள்ளார். தாய்கிழவி படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற கலையரசி ராதிகா, இப்படத்தில் மீண்டும் வலுவான மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தனது மகனின் இறப்புக்கு நீதி தேடி போராடும் ஒரு தாயின் உணர்ச்சி மிகுந்த பயணமே இப்படத்தின் கரு. வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில், கண்களில் கனல் பொங்கும் கோபத்துடன் அமர்ந்திருக்கும் ராதிகாவின் தோற்றம் வலுவாக பதிகிறது. பின்னணியில் கலவர சூழலில் பொதுமக்களை விரட்டும் போலீஸ் காட்சி இடம்பெற்றுள்ளதால், சமூக அவலங்களை வெளிப்படுத்தும் படமாக இது அமையும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அறம் போலவே இதுவும் தீவிரமான தாக்கம் ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும் என்பதைக் காட்டும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.இந்த போஸ்டர் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தில் “கலையரசி” ராதிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவரது மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார்.  இவர்களுடன் அஞ்சலி நாயர்,  எம்.எஸ். பாஸ்கர், சேத்தன், ஆர்.கே. விஜயமுருகன், வினோத்சாகர், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, ரவி வெங்கட்ராம், ஜே கே, ஏ. வெங்கடேஷ், ராம்ஸ், இயக்குநர் தமிழ், செந்தி, ஜானகி, அஸ்வினி தங்கராஜ், கீதா கைலாசம், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சிறு இடைவெளிக்குப் பிறகு, தேனிசைத் தென்றல் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை R. வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஆண்டனி கவனித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் திருவண்ணாமலை முதலான  வட மாவட்டங்களில்  நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this