HomeCinemaவிஜய் இயக்கியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!

விஜய் இயக்கியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!

Published on

விஜய் இயக்கியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
https://www.youtube.com/watch?v=vzu95IcA32g
சமீபத்தில் வெளியான டீசரும், முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், புதுமையான களத்தில் உருவாகியுள்ள வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இப்படம் இருக்குமென்பதை உறுதிப்படுத்துகிறது.
டிரெய்லரில், விபத்தில் நினைவுகளை இழந்த நாயகி ஒவ்வொரு நாளையும் புதிதாக ஆரம்பிக்கிறாள். ஆனால் அவளுக்கு இரண்டு காதல்கள் இருப்பதாகக் கூறி, இரண்டு நாயகர்கள் அவளைச் சுற்றி வருகிறார்கள். கலகலப்பான நகைச்சுவையும், மனம் முழுவதையும் நெகிழ வைக்கும் அழகிய காதலோடும், இப்படம் ஒரு அசத்தலான கமர்ஷியல் எண்டர்டெயினராக இருக்கும் என்பதை டிரெய்லர் அழுத்தமாக உணர்த்துகிறது. இந்த டிரெய்லர் வெளியான வேகத்திலேயே ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
இத்திரைப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியாக நடித்துள்ள நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக, பல புதுமுக திறமைகளை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி வரும் இயக்குநர் விஜய், இத்திரைப்படத்தின் மூலம் மதும்கேஷ் – ஜியா சங்கர் ஜோடியை அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வரும் மார்ச் 6 அன்று ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், காதலும் உணர்ச்சியும்,கலந்த இசை,ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா காட்சிகளுக்கு அழகிய காட்சித் தன்மையை வழங்கியிருக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை சரவணன் வசந்த் கவனித்துள்ளார். சண்டை இயக்கத்தை மனோகர் வர்மா, உடை வடிவமைப்பை ருச்சி முனோத் மேற்கொண்டுள்ளனர். பாடல் வரிகளை வைரமுத்து, கார்கி, ஆர்கஸ் ஆர்யன் ஆகியோர் எழுதியுள்ளனர். படத்தின் இசை உரிமையை T-Series நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Latest articles

தீபாவளித் திருநாளை முன்னிட்டு நடிகர் விஜய் சேதுபதியின் சமூகநல முன்னெடுப்பில் தென்காசியில் தீபாவளி நலவாழ்வு விழா!

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், பொதுமக்களின் உடல்நலத்தைப்...

நாகார்ஜுனாவின் ‘கிங் 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

'கிங் 100 - King 100' திரைப்படம், நடிகர் நாகார்ஜுனா  அக்கினேனியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும், அவரது நூறாவது...

கிளைமாக்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது; பாடல்களும் உணர்வுபூர்வமாக வந்திருக்கின்றன! -அப்பா குட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி  

விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர்...

‘பொலிமேரா 3’ படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் ‘வீராவி’ கதாபாத்திரத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ரசிகர்களின் உற்சாக வரவேற்போடு கடந்த இரு பாகங்களாக பெரும் வெற்றி பெற்ற 'பொலிமேரா' திரைப்பட வரிசையின் மூன்றாம் பாகமான...

More like this