HomeCinemaகவின் – பிரியங்கா மோகன் முதன்முறையாக இணையும் படத்தில் சாண்டி மாஸ்டர்!

கவின் – பிரியங்கா மோகன் முதன்முறையாக இணையும் படத்தில் சாண்டி மாஸ்டர்!

Published on

கவின் – பிரியங்கா மோகன் ஜோடி கென் ராய்சன் இயக்கத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதை அட்டகாசமான போஸ்டர் மற்றும் அறிவிப்பு வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து உருவான கவின் – சாண்டி மாஸ்டர் கூட்டணிக்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே அபாரமான வரவேற்பு இருந்து வருகிறது. அவர்களுடைய இயல்பான நட்பு, கலகலப்பான உரையாடல்கள், ஜாலியான கெமிஸ்ட்ரி ஆகியவை ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தி வந்தது. அந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ஒரே படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியையும் பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

கவினும் சாண்டி மாஸ்டரும் மாடர்ன் கெட்டப்பில், வாயில் வெடியை வைத்தபடி “Boys Are Back” என அறிவிக்கும் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, அறிவிப்பு வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. கலகலப்பான ஒரு ஆபிஸ் சூழலில் அனைத்தும் கலைந்து கிடக்கும் நிலையில், கேமரா மெதுவாக சுழன்று பின்னே நாற்காலியில் அமர்ந்த நிலையில் பிரியங்கா மோகன் அறிமுகமாக, இறுதியாக போஸ்டரில் காணப்பட்ட அதே லுக்கில் கவின் – சாண்டி மாஸ்டர் கூட்டணியுடன் வீடியோ நிறைவடைகிறது.

இந்த அசத்தலான அறிவிப்பு வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாக பகிர்ந்து, பாராட்டி வருகிறார்கள்.

இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ இசையமைக்கிறார். ஃபேண்டஸி – ரொமான்டிக் – காமெடி ஜானரில் உருவாகும் இந்த  படத்தை திங்க் ஸ்டுடியோஸ் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார்.

கவின் – பிரியங்கா மோகன் ஜோடி முதன்முறையாக இணைந்திருப்பதே ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது சாண்டி மாஸ்டரும் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது. கண்டிப்பாக ரசிகர்களை உற்சாகப்படுத்தும் கலகலப்பான எண்டர்டெயினராக இப்படம் இருக்கும் என்பது உறுதியாகிறது.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this