HomeCinemaதருமபுரம் ஆதீனம் இசைப் புலவர் விருது வழங்கி கௌரவித்தது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது! -இசையமைப்பாளர் கார்த்திக்...

தருமபுரம் ஆதீனம் இசைப் புலவர் விருது வழங்கி கௌரவித்தது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது! -இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா

Published on

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி பிரமாண்ட அரங்கத்தில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60 ஆவது மணிவிழா மாநாடு இன்று துவங்கியது.

10 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல் நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும் திரைப்பட பின்னணி இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

ஜகம் நீ ஜனனி என்ற பாடலுடன் துவங்கி பக்தி பாடல்கள், பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் போன்ற உருக்கமான திரைப்படப் பாடல்களை பாடி அனைவரையும் தனது இசையால் கட்டுவித்தார்.

இன்னிசை கச்சேரியை நிறைவு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா கூறுகையில்,

தருமபுரம் ஆதீனத்தின் முன்னிலையில் இசையமைப்பது எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. மிகப்பெரிய மரியாதை கிடைத்துள்ளது சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்பதால் பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது இசை நிகழ்ச்சியை முழுமையாக அமர்ந்து பார்த்து ரசித்து நன்றாக உள்ளது என்றது வாய்ப்பு மட்டுமல்ல ஆசிர்வாதமாக கருதுகிறேன்.

தருமபுரம் ஆதீனத்தின் இசை புலவர் என்ற விருது வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள். இதற்கு முன்பு இந்த விருதை 26 ஆவது குருமகா சன்னிதானம் கே.ஜே யேசுதாஸ்சுக்கு வழங்கி உள்ளதாக ஆதீன புலவர் குறிப்பிட்டபோது இடைமறித்து பேசிய கார்த்திக் ராஜா அவர் பெற்ற விருது பின்னர் நான் வாங்கும் போது ரொம்ப சின்னவனாக தெரிகிறேன்.

தருமபுரம் ஆதீனம் இருந்ததால் சுவாரசியமான பாடல்கள் பாடவில்லை. நீங்கள் கேட்டிருந்தால் கூட ஏ ஆத்தா ஆத்தோரமா வாறியா என்ற பாடலை கூட பாடியிருப்பேன் ஆனால் அதற்கான இடம் இது இல்லை, பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் என்ற பாடலை பாடிய போது தருமபுரம் ஆதீனம் ரசித்து கேட்டது எனக்கு பெருமையாக இருந்தது என்றார்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this