HomeCinemaஇந்த படத்திற்கு 2-ம் பாகம் எடுக்க வாய்ப்புள்ளது! -'கம்பி கட்ன கதை' பட விழாவில் தயாரிப்பாளர்...

இந்த படத்திற்கு 2-ம் பாகம் எடுக்க வாய்ப்புள்ளது! -‘கம்பி கட்ன கதை’ பட விழாவில் தயாரிப்பாளர் ரவி பேச்சு

Published on

ராஜநாதன் பெரியசாமி இயக்கியுள்ள ‘கம்பி கட்ன கதை” படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி, ”எலிசபெத் தலையில கம்பி இருக்கிறது. அதாவது காமெடியா வைச்சிருக்கோம். படத்தை மாஸாகவே செஞ்சிருக்கோம்” என்றார்.

கதாநாயகன் நட்டி ”படத்தில் ஸ்கிரிப்ட் என்ன வேண்டும் என்றதோ அதைத்தான் செய்தோம். படம் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகிறது. கண்டிப்பா வந்து பாருங்க” என்றார்.

தயாரிப்பாளர் ரவி, ”’கம்பி கட்டுன கதை’ என்று தலைப்பு வைத்ததற்கு காரணம் இருக்கிறது. கதை அமைப்பை சிறப்பாக உருவாக்க பல விவாதங்களை நடத்தினோம். இந்தப் படம் கடந்த 22 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வந்த ஒரு கனவு. ஒரு காமெடி சாமியாரை மையமாகக் கொண்டு கதை உருவாக்கியிருந்தோம். நட்டி சார் இப்படத்திற்கு ஒப்புதல் அளித்ததும், நாங்கள் எழுதிய கதையே முழுமையாக மாறிவிட்டது. இந்த படத்திற்கு பாகம் 2 எடுக்கப்படும் வாய்ப்புள்ளது” என்றார்.

நடிகர் சிங்கம்புலி, நாயகன் முகேஷ் ரவி, நடிகர் முருகானந்தம், நடிகர் ‘ஜாவா’ சுந்தரேசன், படத்தின் கதாநாயகிகள் ஸ்ரீரஞ்சினி, ஷாலினி, படத்தை வெளியிடும் உத்ரா புரொடக்‌ஷன்ஸ் ஹரி உத்ரா, பாடலாசிரியர் கு. கார்த்திக், பாடலாசிரியர்  ஆ ப ராசா, கலை இயக்குநர் சிவகுமார், ஒளிப்பதிவாளர் எம் ஆர் எம் ஜெய் சுரேஷ், நடிகர் கே பி ஒய் கோதண்டம், நடிகர் வழக்கு எண் முத்துராமன் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்துகொண்டு படம் குறித்து பேசினார்கள்.

Latest articles

பிளாக் கோல்டு சினிமா விமர்சனம்

ஹீரோ வில்லன்களை சுற்றி வளைத்தபின் ஒரு இடத்தில் வெறித்தமான பார்வையுடன் உட்கார்ந்து, கையில் ஒரு இரும்புத் துண்டை பிடித்தபடி...

ஜான் டோ சினிமா விமர்சனம்

கேரள போலீஸ் ஒரு சிறுவன் இறந்துபோனதன் பின்னணியை அலசி ஆராய்கிறது. தமிழ்நாடு போலீஸ் ஒரு சிறுவன் காணாமல் போனதன்...

இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!

இந்தியாவின் முதல் படிக்கிணறு கலைக் கண்காட்சியான (Stepwell Art Biennale) பவோலி ஆர்ட் சங்கம் அமைப்பில், கலாச்சாரம் மற்றும்...

தெருக்குறள் அறிவின் காதலின் அழகான உணர்வுகளைச் சொல்லும் ‘ஹலோ’ ஆல்பம் பாடல்! 

https://www.youtube.com/watch?v=Y2v2XjyTP4o Bigson Records தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ’ இசை ஆல்பத்தில் தெருக்குறள் அறிவு மற்றும் அஸ்வதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்....

More like this