HomeCinemaஇந்த படத்தை நிச்சயம் குடும்பத்தோடு பார்த்து என்ஜாய் செய்யலாம்! -கிஸ் பட விழாவில் நடிகர் கவின்...

இந்த படத்தை நிச்சயம் குடும்பத்தோடு பார்த்து என்ஜாய் செய்யலாம்! -கிஸ் பட விழாவில் நடிகர் கவின் உறுதி 

Published on

கவின், ப்ரீத்தி நடித்துள்ள ‘கிஸ்’ திரைப்படம் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகவிருக்கிறது. முன்னதாக படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய நடிகர் கவின், “உதவி இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஆக்ஷன் மாஸ்டர், தயாரிப்பாளர் ராகுல் என இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. படத்தின் முதல் சிங்கிள் பாடி தந்த அனிருத் சாருக்கும் நன்றி. ‘என்னாலே…’ பாடல் எழுதி தந்த விக்னேஷ் சிவன் அண்ணன், விஷ்ணு எடவன், அருண் ராஜா காமராஜா, வாய்ஸ் ஓவர் தந்த விஜய் சேதுபதி சார் எல்லோருக்கும் நன்றி. பிஸி ஷெட்யூல்க்கு மத்தியில் இந்த நிகழ்வுக்கு நேரம் ஒதுக்கி வந்த விடிவி சார், ப்ரீத்திக்கு நன்றி. சதீஷ் இயக்குநராக அடுத்தடுத்த உயரங்கள் அடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஜென் இசை இந்த படத்திற்கு பெரிய பலம். அவர் அடுத்தடுத்த உயரங்கள் செல்வார். படத்தை நிச்சயம் குடும்பத்தோடு பார்த்து என்ஜாய் செய்யலாம்” என்றார்.

இயக்குநர் சதீஷ், “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராகுல் சாருக்கு மிக்க நன்றி! ‘கிஸ்’ என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது. ஆனால், இந்த கதைக்கு ‘கிஸ்’ டைட்டில் தான் பொருத்தமாக இருக்கும் என அவரிடம் கேட்டோம். உடனே சம்மதித்தார். அவருக்கு நன்றி! கவினின் முதல் படத்திற்கு நான் கோரியோகிராப் செய்தேன். இயக்குநராக நான் அறிமுகமாகும் படத்தில் அவர் ஹீரோ. இது எனக்கு பெருமையான தருணம். ப்ரீத்தி, விடிவி சார் என எல்லோரும் பெஸ்ட்டாக இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. படம் பார்த்துவிட்டு சப்போர்ட் பண்ணுங்க” என்றார்.

நடிகை ப்ரீத்தி, “‘கிஸ்’ மூவி ஜாலியாக எடுக்கப்பட்ட படம். முழுக்க என்டர்டெயின்மென்ட்டாக இருக்கும். படம் முழுக்க சிரித்துக்கொண்டே இருப்பீர்கள். சதீஷ் மாஸ்டருடைய ஃபீமேல் வெர்ஷனாக தான் என்னுடைய கேரக்டர் படத்தில் இருக்கும். ஜென் மார்ட்டின் இசை அருமையாக இருக்கும். தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகர் ஷக்தி, “கவின் அண்ணாவுடன் படம் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வாய்ப்புக் கொடுத்த கவின் அண்ணா, சதீஷ் சாருக்கு நன்றி. படத்தில் சோஷியல் அவேர்னஸூம் செய்து இருக்கிறேன். அது படம் பார்க்கும்போது உங்களுக்கு தெரியும். படக்குழுவினர் அனைவருடனும் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ஜாலியான கலர்ஃபுல்லான படமாக உருவாகி இருக்கிறது ‘கிஸ்’. உங்கள் ஆதரவு தேவை” என்றார்.

நடிகர் விடிவி கணேஷ், “தூக்கத்தில் கூட எதாவது சேட்டை செய்து கொண்டே தூங்கும் ஹைப்பரான நபர்தான் சதீஷ். நடிகர் விஜய் என்றால் சதீஷ்க்கு ரொம்பவும் பிடிக்கும். நெல்சன் ஒரு டைம் சொன்னால் அதற்கு முன்பே சதீஷ் இருந்தால் விஜய் ஷூட்டிங் ஸ்பாட் வந்துவிடுவார். அவர் செய்யும் சேஷ்டை எல்லாம் பார்த்து விஜய் சிரிப்பார். செட்டே கலகலப்பாக இருக்கும். ‘பீஸ்ட்’ படத்தில் சதீஷூடன் நான் நடித்த லிஃப்ட் சீன் தெலுங்கில் பார்த்துவிட்டு நிறைய ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். கிஸ் என்றதும் எனக்கு கிடைத்த முதல் முத்தம் தான் நியாபகம் வருகிறது. மகாபலிபுரம் கடற்கரையில் பிரெஞ்ச் பெண் ஒருவரிடம் கேட்டு வாங்கிய முத்தம். என் வாழ்க்கையில் அதை மறக்க மாட்டேன். படக்குழுவினர் எல்லோருமே ஜாலியாக வேலை பார்த்திருக்கிறார்கள். உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை” என்றார்.

நடிகர் மிர்ச்சி விஜய், “நானும் கவினும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள். இப்போது ஒரு நண்பனாக அவருடன் சேர்ந்து பணிபுரிந்ததும் மகிழ்ச்சி. இன்னும் பல உயரங்கள் செல்ல வாழ்த்துக்கள். சதீஷ் அருமையாக படத்தை இயக்கியுள்ளார். படத்தில் பணிபுரிந்த எல்லோருமே சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். உங்கள் ஆதரவை கொடுங்கள்” என்றார்.

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன், எடிட்டர் ஆர்.சி. பிரணவ், கலை இயக்குநர் மோகனம் மகேந்திரன், இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் உள்ளிடோரும் நிகழ்வில் பேசினார்கள்.

 

 

 

Latest articles

ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது! -இசையமைப்பாளர் சித்து குமார்

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ‘உசுரே’, ‘மயிலாஞ்சியே’, ‘இது தான்’, ‘ஜோ’ படத்தின் ‘உருகி உருகி’, ‘ஆரோமலே’ படத்தின்...

418 சினிமா விமர்சனம்

பயங்கரமான சம்பவங்கள் நடந்ததால் பல வருடங்களாக மூடியிருந்த அந்த கல்லூரியின் ஹாஸ்டல் மீண்டும் திறக்கப்பட, அதில் சேர்கிறான் மாணவன்...

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய 'பாகுபலி' நாயகன்! தெலுங்கு சினிமாவை பான் இந்தியா தளத்திற்குக் கொண்டு சென்ற...

‘கணம்’ ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

‘சப்த சாகரதாச்சே எல்லோ’ மற்றும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த், ‘கணம்’...

More like this

ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது! -இசையமைப்பாளர் சித்து குமார்

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ‘உசுரே’, ‘மயிலாஞ்சியே’, ‘இது தான்’, ‘ஜோ’ படத்தின் ‘உருகி உருகி’, ‘ஆரோமலே’ படத்தின்...

418 சினிமா விமர்சனம்

பயங்கரமான சம்பவங்கள் நடந்ததால் பல வருடங்களாக மூடியிருந்த அந்த கல்லூரியின் ஹாஸ்டல் மீண்டும் திறக்கப்பட, அதில் சேர்கிறான் மாணவன்...

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய 'பாகுபலி' நாயகன்! தெலுங்கு சினிமாவை பான் இந்தியா தளத்திற்குக் கொண்டு சென்ற...