HomeCinemaவிஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் & வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா...

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் & வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி  நடிக்கும் கட்டா குஸ்தி 2 பிரமாண்ட பூஜையுடன் துவங்கியது!

Published on

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “கட்டா குஸ்தி” படத்தின் இரண்டாம் பாகம் ‘கட்டா குஸ்தி 2’ இன்று பிரம்மாண்டமான பூஜையுடன் இனிதே துவங்கியது.

முன்னதாக வெளியிடப்பட்ட ப்ரொமோ வீடியோ, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, இணையம் முழுவதும் வைரலாகியது. இதில் விஷ்ணு விஷால், ஐசரி கே கணேஷ் , ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த் ஆகியோருடன் இயக்குநர் செல்லா அய்யாவும் தோன்றினார். வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையுடன் அமைந்த அந்த ப்ரொமோ, இப்படமும் மிரட்டலாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தியது.

முந்தைய பாகத்தின் கதை முடிந்திருந்தாலும், அதன் தொடர்ச்சியாக, ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில், எல்லோரின் இல்லங்களிலும் காணப்படும் முக்கிய பிரச்சினைகளை நகைச்சுவை வடிவில் பதிவு செய்யும் வகையில், அனைவரும் ரசிக்கும் வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படமாக இந்தப் படம் உருவாகிறது.

முதல் பாகத்தில் நடித்த ஜோடியான விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். அதோடு, முதல் பாகத்தில் நடித்த கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் ஆகியோரும் தொடர்கிறார்கள். இவர்களுடன் நடிகர் கருணாகரன் முக்கியமான வேடத்தில் இணைகிறார்.

முதல் பாகத்தை தயாரித்திருந்த விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து, இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் ஐவி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இஷான் சக்சேனா இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, அம்பாசமுத்திரம், பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this