HomeCinema'காந்தாரா அத்தியாயம் 1' படத்திலிருந்து நடிகை ருக்‌மிணி வசந்தின் கேரக்டர் லுக் வெளியீடு!

‘காந்தாரா அத்தியாயம் 1’ படத்திலிருந்து நடிகை ருக்‌மிணி வசந்தின் கேரக்டர் லுக் வெளியீடு!

Published on

இந்திய கலாச்சாரத்தில் புனிதமும் பண்பாட்டு முக்கியத்துவமும் கொண்ட வரமஹாலக்ஷ்மி திருநாளில், வரவிருக்கும் மாபெரும் திரைப்படமான “காந்தாரா அத்தியாயம் 1” இன் நாயகியாக நடிக்கும் நடிகை ருக்‌மிணி வசந்தின் ‘கனகவதி’ (Kanakavathi) கதாபாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, ஹோம்பாலே பிலிம்ஸ் பெருமையுடன் வெளியிட்டுள்ளது.

இப்படத்தை எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. நம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கதைக்களத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி, மக்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த “காந்தாரா” படத்தின் முன்கதையைச் சொல்லும் (Prequel) படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இவ்வருடத்தின் தொடக்கத்தில், நாயகன் ரிஷப் ஷெட்டியின் கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்தநாளன்று வெளியிடப்பட்டு, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டதை அறிவித்த “Wrap -Up” வீடியோ, படத்தின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தி, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்போது, கனகவதி கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியீடு, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காந்தாரா அத்தியாயம் 1 படத்தின் கதை, இந்திய பாராம்பரியத்தின் வேர்களைப் பற்றிய ஆழமான கதையைச் சொல்வதோடு, விஷுவலாக வேறொரு உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். ஒளிப்பதிவாளர் அர்விந்த் S . காஷ்யப் (Arvind S. Kashyap’s)உடைய கண்கவர் ஒளிப்பதிவும், B. அஜநீஷ் லோக்நாத் (Ajaneesh
Loknath) வழங்கியுள்ள ஆன்மாவை வருடும் இசையும், ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் விஜய் கிரகந்தூரின் ( Vijay Kiragandur) பிரம்மாண்ட தயாரிப்பும், இப்படத்தை இதுவரை இல்லாத பேரனுபவமாக உருவாகியுள்ளது.

“காந்தாரா அத்தியாயம் 1” உலகம் முழுவதும் 2 அக்டோபர் 2025 அன்று, கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் வெளியாகிறது.

இன்றைய தினம் நாடு முழுவதும் மகாலட்சுமி தேவியின் அருளைப் பெறும் நேரத்தில்,
உலகம் முழுவதும் பார்வையாளர்களின் மனங்களில் அழியாத இடத்தைப் பெறவிருக்கும் கனகவதி பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஹோம்பாலே பிலிம்ஸ் பெருமையுடன் வழங்குகிறது.

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this