HomeCinemaசிறு வயதில் சாமி சிலை மீது கல் வீசுவது, பராசக்தி படம் போல் வசனம் பேசுவது...

சிறு வயதில் சாமி சிலை மீது கல் வீசுவது, பராசக்தி படம் போல் வசனம் பேசுவது உள்ளிட்ட காட்சிகள் படத்தில் இருக்கிறது! -கண்ணப்பா படத்தின் பிரி ரிலிஸ் நிகழ்வில் நடிகர் சரத்குமார் பேச்சு 

Published on

விஷ்ணு மஞ்சு நடிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்.மோகன் பாபு, அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஜூன் 27-ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவிருக்கிறது. முன்னதாக படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் ல் நடைபெற்றது.

நடிகர் சரத்குமார், நடிகர் சம்பத் ராம். படத்தொகுப்பாளர் ஆண்டனி, படத்தை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் ஆகியோர் கலந்துகொண்டு படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்கள்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், “’கண்ணப்பா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் மிகப்பெரிய அளவில் பண்ண வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள், ஆனால் சில காரணங்களால் நடக்காமல் போய்விட்டது. சரி நான் பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவு செய்தேன். இதை அறிந்த விஷ்ணு மஞ்சு, நம்பளே பண்ணலாம், நீங்களே படத்தின் சார்பாக பத்திரிகையாளர்களை சந்தித்துவிடுங்கள் என்றார். அதனால் தான் இந்த ஏற்பாடு.

கண்ணப்பா ஒருவரிக்கதை தான். 63 நாயனார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் சிவபக்தர்களில் மிக சிறப்பு வாய்ந்தவர், என்பது நமக்கு தெரியும். ஏற்கனவே ராஜ்குமார் சாரும், கிருஷ்ணா சாரும் கண்ணப்பா படத்தை பண்ணிவிட்டார்கள். இதை விஷ்ணுவின் கோணம் என்று தான் சொல்ல வேண்டும். நம்பிக்கையற்றவர், பிறகு நம்பிக்கையுள்ளவராக மாறுகிறார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எப்படி தீவிர சிவபக்தராக மாறுகிறார், அவருக்கான போராட்டம் என்பது தான் இந்த படத்தின் கரு. மோகன் பாபு சாருக்கும், விஷ்ணு மஞ்சுவுக்கும் நான் தொடர்ந்து வாழ்த்து சொல்லிக் கொண்டே இருக்கிறேன், இதற்கு காரணம் படத்தின் லொக்கேஷன் தான்.

இயற்கையின் சொர்க்கம் என்றால் அது நியூசிலாந்து தான். அங்கு இருப்பது நிஜமான வண்ணம், டிஐ-யில் பண்ணாத ஒரிஜினல் வண்ணம் என்று தைரியமாக சொல்லலாம். அந்த இடத்தில் 10 நாட்கள் அல்லது 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தலாம், ஆனால் 120 நாட்கள் வெளிநாட்டில் படம் எடுப்பது என்பது சாதாரண விசயம் இல்லை. அதற்கான உழைப்பு என்பது மிகப்பெரியது. அந்த காலத்தில் இந்த பூமி இப்படி தான் இருந்திருக்கும் என்று அந்த இடத்தை தேர்வு செய்தார்கள். குளிர் அதிகமாக இருந்தாலும், பணியை சிறப்பாக முடித்தோம்.

இந்த போராட்டம், சிறு வயதில் சாமி சிலை மீது கல் வீசுவது, பராசக்தி படம் போல் வசனம் பேசும் காட்சிகளும் படத்தில் இருக்கிறது. அப்படி ஒரு மனப்போரட்டத்தில் இருக்கும் தின்னா எப்படி சிவபக்தராக மாறுகிறார் என்பது தான் கதை. நான் தின்னாவின் அப்பாவாக நடித்திருக்கிறேன். பல முறை மோகன் பாபு சாருடன் படம் பண்ணுவதாக இருந்து பண்ண முடியாமல் போனது, ஆனால் இந்த படத்தில் அது நடந்திருப்பது மகிழ்ச்சி.

முகேஷ் குமார் சிங் மகாபாரதத்தை சிறப்பாக இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார், அவர் 3 ஆயிரம் கோடியில் மகாபாரதத்தை பிரமாண்டமாக எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார், அப்படிப்பட்டவரை அழைத்து கண்ணப்பா நாயனாரின் கதையை எடுக்க சொன்னது வியப்பாக இருந்தாலும், அவர் சிறப்பாக எடுத்திருக்கிறார். எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம், எனக்கும் தின்னாவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் சிறப்பாக அமைந்திருக்கிறது.

இந்த படம் மிகப்பெரியது. அக்‌ஷய் குமார், மோகன்லால், பிரபாஸ் என பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். கடைசி ஒரு மணி நேரம் சிறப்பாக இருக்கும் என்று ஆண்டனி சொன்னார், அவர் படத்தை முதலில் பார்த்தவர் என்பதால் அதை சொல்லியிருக்கிறார், மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து ஒளிப்பதிவாளர், ஹாங்காங்கில் இருந்து ஸ்டண்ட் மாஸ்டர் என்று மிக சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். இது மக்கள் தெரிந்துக் கொண்டு புரிந்துக் கொள்ள வேண்டிய படமாக இருக்கும்.

தற்போதைய தலைமுறைகளுக்கு நாம் பல கதைகளை சொல்ல மறந்துவிடுகிறோம். பொன்னியின் செல்வன் கதை மூத்தவர்களுக்கு தெரியும், ஆனால் இளைய தலைமுறைகளுக்கும் தெரிய வேண்டும், என்று தான் மணி சார் அதை படமாக எடுத்திருக்கிறார். அதேபோல் தான், கண்ணப்பா கதையும் இளைய தலைமுறையினருக்கு தெரிய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இதை விஷ்ணு தனது கோணத்தில், சிவபக்தரான கண்ணப்பா அதற்கு முன் எப்படி இருந்தார், அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை சொல்லியிருக்கிறார். அது சிறிய கதையாக இருந்தாலும் கூட, விஷ்ணு கோணத்தில் அது மிக சிறப்பாக வந்திருக்கிறது, அதை அவர் சாதாரணமாகவும் சொல்லவில்லை, பல ஆராய்ச்சிகள் செய்து, கடினமான உழைப்பை செலுத்தி எடுத்திருக்கிறார். அவரது உழைப்புக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கண்ணப்பாவின் கதை இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்றால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இரண்டாவது பக்தி, இன்று எவ்வளவு பேருக்கு பக்தி இருக்கிறது, என்று தெரியவில்லை. தினமும் கோவிலுக்கு போகாமல் இருக்கலாம், ஆனால் பிரச்சனை வந்தால் நிச்சயம் கோவிலுக்கு செல்வோம். இறைவன் இருக்கிறார் என்பதை மேலும் மேலும் சொல்லி, அதிலும் சிவபக்தியை பற்றி சொல்லி, பக்தி எவ்வளவு முக்கியம் என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். கடவுள் இருக்கிறார் என்பதை, அது ஏசுவாக இருக்கலாம், அல்லாவாக இருக்கலாம், கடவுள் இருக்கிறார், என்பதை சொல்ல வேண்டும்.

தற்போதைய வேகமான ஓட்டத்தில் கடவுளையும், பக்தியையும் மறந்து விடுகிறார்கள். எனவே கலை மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும் மக்களிடம் பக்தி பற்றி சொல்ல வேண்டியது அவசியம். அந்த வகையில், கண்ணப்பா படத்தை பார்க்கும் போது இப்படி ஒரு சிவபக்தர் இருந்தார், என்பதை மக்கள் அறிந்துக் கொள்வார்கள். பக்தி என்பது அவர் அவர் மனதில் தோன்றுவது தான், அந்த பக்தி பரவசத்தோடு இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய படம் தான் கண்ணப்பா. உங்களுடைய ஆதரவோடும், மக்களின் ஆதரவோடும் இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

அதேபோல் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்கள் பார்வையில் இந்த படம் எப்படி இருக்கிறது, என்பதை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு, ‘மச்சா உள்ளே வந்துடாதே’ என்றெல்லாம் சொல்லாதீங்க. உங்களுக்கு ஒரு கருத்து இருக்கலாம், உங்கள் நண்பர்களுக்கு வேறு ஒரு பார்வை இருக்கலாம், சிலர் பிரபாஸுக்காக படம் பார்க்க வரலாம், எனவே அவர் அவர் பார்வையில் படத்தை பாருங்கள், அதை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள் என்று சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.

Latest articles

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - இயக்குநர் பாபி கொல்லி - கே வி என் புரொடக்ஷன்ஸ்-  கூட்டணியில் தயாராகும்'...

இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் ‘யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

https://www.youtube.com/watch?v=OrIqzmpg04k AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில்,...

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24-ம் தேதி வெளியாகிறது!

MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது. அனைவரது கவனத்தையும் கவரும் வகையில்...

முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இயக்குநர் சீனு ராமசாமியின் கோரிக்கை!

எழுத்தாளர், இயக்குநர் என பல தளங்களில் இயங்கி வருபவர்  சீனு ராமசாமி. சமீபத்தில் இவர் எழுதிய 'சினிமாவின் ஆன்மா'...

More like this

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - இயக்குநர் பாபி கொல்லி - கே வி என் புரொடக்ஷன்ஸ்-  கூட்டணியில் தயாராகும்'...

இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் ‘யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

https://www.youtube.com/watch?v=OrIqzmpg04k AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில்,...

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24-ம் தேதி வெளியாகிறது!

MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது. அனைவரது கவனத்தையும் கவரும் வகையில்...