ஒரு படத்தில் தயாரிப்பாளர் நடிக்கிறார் என்றால் பெரும்பாலும் அந்த கதாபாத்திரம் கதையில் வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்கும். ஆனால் எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘லாரா’ படத்தில் அதன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் காவல் ஆய்வாளர் பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்த பாத்திரம் வலிந்து திணிக்கப்பட்டதாக இல்லாமல் இயல்பாக இருந்தது. படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றது. ‘டெண்ட் கொட்டா’ ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
அந்த படத்தின் ஊடக விமர்சனங்களில் தயாரிப்பாளர் கார்த்திகேசன் நடித்த கதாபாத்திரம் பற்றியும் அவரது இயல்பான நடிப்பைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்கள். அந்த அளவுக்குப் பாத்திரத்துக்கு ஏற்ப இயல்பாக நடித்து இருந்தார். அதை பார்த்து கிடைத்த வாய்ப்பால் திருமலை புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சுகவனம் இயக்கும் ‘ஒண்டி முனியும் நல்ல பாடனும்’ என்ற படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது அவரது இயல்பான நடிப்பிற்குக் கிடைத்த ஒரு நற்சான்று!
‘ஒண்டி முனியும் நல்ல பாடனும்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. அந்த படத்தில் அவர் நடித்துள்ள பாத்திரம் அவருக்கு நல்லதொரு அடையாளமாகவும், நற்பெயரைப் பெற்றுத் தரும் வகையிலும் உள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கும் கார்த்திகேசன், அடுத்ததாகத் தயாரிக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதன் தொடக்க விழா அவரது பிறந்த நாளான ஜூன் 14ம் தேதி நடைபெறவுள்ளது.