HomeUncategorizedஅனைவருமே உடலில் கழிப்பறையை வைத்துக் கொண்டிருக்கிறோம்; அதைப் புரிந்து கொள்ள வைக்கும் கருத்துள்ள படம் இது!...

அனைவருமே உடலில் கழிப்பறையை வைத்துக் கொண்டிருக்கிறோம்; அதைப் புரிந்து கொள்ள வைக்கும் கருத்துள்ள படம் இது! -கழிப்பறை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் தினா பேச்சு

Published on

கிஜு இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ளது ‘கழிப்பறை.’ திரைப்படம்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கிஜு பேசியபோது, ”கழிப்பறை, முதன் முதலில் இந்தப்படத்தின் கதையை அமித் சாரிடம் சொன்ன போது, பட்ஜெட் சின்னது தான், ஆனால் பட்ஜெட் தாண்டியும், சரி பார்த்துக் கொள்ளலாம் என ஊக்கம் தந்தார். Vanshika Makkar Films க்கு என் நன்றி. ஸ்ரீகாந்தன் என் இசையமைப்பாளர் மிக அருமையான பாடல் தந்துள்ளார். பாலமுருகன் என் நண்பர், செல்போனில் படமெடுத்த காலத்திலிருந்து அவர் தான் என் கேமராமேன், நான் என்ன படமெடுத்தாலும் அவர் தான் கேமராமேன். உன்னி சாரிடம் பாடல் பற்றிச் சொன்னேன், பாடல் பாடிவிட்டு பாட்டு நல்லாருக்கா ? என என்னிடம் கேட்டார். இந்த பணிவால் தான் அவர் இந்தளவு வளர்ந்துள்ளார். வன்ஷிகா என்ன மாதிரி பாடல் என்றாலும், மிக திறமையாகப் பாடி அசத்திவிட்டார். தமிழ் சினிமாவில் பெரிய உயரம் தொடுவார். என் படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் நன்றி. கழிப்பறை ஒரு நல்ல படம், விரைவில் திரைக்கு வரவுள்ளது, உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.

இசையமைப்பாளர் தீனா, ”தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை தர முன்வந்திருக்கும், அமித்குமார், ப்ரீத்தி தம்பதிகளுக்கு நன்றி. அவர்களது பெண் பிள்ளையை இந்த படத்தில் அருமையாகப் பாட வைத்துள்ளார்கள். நான்கு பாடல்களும் மிக அருமையாக உள்ளது. ஸ்ரீகாந்த் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார். கழிப்பறை மிக நல்ல கருத்து கொண்ட படம். உலகில் யாரும் உயர்ந்தவனில்லை, அனைவருமே நம் உடலில் கழிப்பறையை வைத்துக் கொண்டு தான் இருக்கிறோம். இதைப் புரிந்து கொண்டு, அனைவரும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் பல கிராமத்தில் கழிப்பறை இல்லாத நிலை இருந்தது, அதை நம் பிரதமர் மோடி மாற்றி வருகிறார். கழிப்பறை இல்லாத வீடு இல்லாத நிலை இன்று வந்துள்ளது. இந்த கருத்தைப் பேசும் இப்படம் ஜெயிக்க வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this