HomeCinemaகவின் நடிக்கும் கிஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

கவின் நடிக்கும் கிஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Published on

இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் கவின் நடிப்பில், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் கிஸ் படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியானது.

காதலர் தினம் நெருங்கும் நிலையில், காதல் ஜோடிகள் சுற்றிலும் கூடி முத்தமிட, நடுவில் ஸ்டைலீஷாக நிற்கும் கவினின் கண்கள் மட்டும் மறைக்கப்பட்டிருக்கும், புதுமையான, மிகவும் வித்தியாசாமான ஃபர்ஸ்ட்லுக், பார்ப்பவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகுமென படக்குழு அறிவித்திருப்பது, மேலும் படத்தின் ஆவலைத் தூண்டுகிறது.

டான்ஸராக திரைத்துறைக்குள் நுழைந்து, நடன இயக்குநராக வளர்ந்து, நடிகராகவும் வலம் வரும் சதீஷ், இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய இளைய தலைமுறை காதலைக் கொண்டாடும் விதத்தில் வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திரமான கவின் இப்படத்தில் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக, “அயோத்தி” படப்புகழ் ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் தேவயானி, கவுசல்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி, காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார், எடிட்டராக RC பிரனவ் பணியாற்ற, மோகன் மகேந்திரன் கலை இயக்கம் செய்துள்ளார். சண்டைப்பயிற்சி – பீட்டர் ஹெயின்.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் குவித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல், பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தை தயாரித்துள்ளார்.

Latest articles

காதல் மற்றும் அதீத ஈடுபாட்டின் இருண்ட பக்கத்தைப் பேசுகிற ‘EYES’ மலையாள தொடர் அக்டோபர் 9 முதல் Sony LIV தளத்தில் காணலாம்!

Sony LIV-ன் மலையாள Original தொடரான ‘EYES’ காதல் மற்றும் அதீத ஈடுபாட்டின் இருண்ட பக்கத்தைப் பேசுகின்றது,அக்டோபர் 9...

நற்பணி இயக்தினரையும் ரசிகர்களையும் சந்தித்து உற்சாகமூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக அனைத்து மாநில மாவட்ட, நகர, ஒன்றியம், பகுதி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில்...

ரியோராஜ் நடிப்பில் ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சிவகார்த்திகேயன், சூரி, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பூஜை நிகழ்வைத் தொடங்கி வைத்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக...

புதிய தொழில்நுட்பங்களுடன் தனித்துவமான திரைப் படைப்புகளை உருவாக்க ‘மந்திரா ஸ்டுடியோஸ்.’ –ஆர்.டி. ராஜா அறிவிப்பு

தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளையும், புதுமையான கதை சொல்லும் முறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா புதிய...

More like this