HomeCinemaமீண்டுமொருமுறை தலைசிறந்த காட்சியனுபவத்தை தரவுள்ள காந்தாரா அத்தியாயம் 1 அக்டோபர் 2; 2025-ல் ரிலீஸ்!

மீண்டுமொருமுறை தலைசிறந்த காட்சியனுபவத்தை தரவுள்ள காந்தாரா அத்தியாயம் 1 அக்டோபர் 2; 2025-ல் ரிலீஸ்!

Published on

பிரமாண்டமான மற்றும் மண்சார்ந்த சினிமா அனுபவங்களுக்கு பெயர் பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ், காந்தாரா 2-ம் பாகம் மூலம் மீண்டுமொருமுறை தலைசிறந்த காட்சியனுபவத்தை தரவுள்ளது. படம் அக்டோபர் 2, 2025 அன்று வெளியாகிறது.

படக்குழு குந்தாப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கடம்பப் பேரரசை மீண்டும் உருவாக்கி, பார்வையாளர்களை வீரம், கலாச்சாரம் மற்றும் மர்மம் நிறைந்த சகாப்தத்தில் மூழ்கடிக்கவுள்ளனர். இந்தத் திரைப்படம் காந்தாரா உலகின் கடந்த காலத்திற்கு பார்வையாளர்களை கூட்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அற்புதமான படைப்பினை இயக்கி நடித்திருக்கும், ரிஷப் ஷெட்டி இப்படத்திற்காக முழு உழைப்பையும் கொட்டியிருக்கிறார். ரிஷப் தனது கதாபாத்திரத்தை உண்மையாக சித்தரிக்க, கேரளாவில் இருந்து தோன்றிய பழமையான தற்காப்பு கலை வடிவங்களில் ஒன்றான களரிபயட்டில் கடுமையான பயிற்சி பெற்றார். கலையில் தேர்ச்சி பெறுவதற்கான அவரது அர்ப்பணிப்பு அவரது நடிப்புக்கு ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் சேர்த்து, அவரது பாத்திரத்தை பாரம்பரியமிக்கதாகவும், உண்மையானதாகவும் ஆக்கியுள்ளது.

காந்தாரா: அத்தியாயம் 1 படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட உருவாக்கம், ரிஷாப் ஷெட்டியின் அர்ப்பணிப்பு மற்றும் முதல் அத்தியாயத்தின் மீதான ஈர்ப்புடன், இந்தப் படம் திரையுலகில் இன்னொரு மைல்கல்லாக மாற உள்ளது.

கொங்கன் நாட்டுப்புற வாழ்வியலின் செழுமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியது காந்தாரா: பாகம் 1. அதன் கவர்ச்சியான கதை, மூர்ச்சடைய வைக்கும் காட்சிகள் மற்றும் இதயப்பூர்வமான நடிப்பால், படம் இந்திய எல்லைகளுக்கு அப்பால் பார்வையாளர்களை கவரந்தது. உள்ளூர் மரபுகளை மிக அழுத்தமான கதைசொல்லலில் உண்மையாக சித்தரித்த இப்படம், உலகளாவிய ரசிகர்களை ஈர்த்து, ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகியது.

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this