HomeCinemaஏராளமான சர்வதேச விருதுகளை வென்ற ‘கிடா' படத்தின் டிரெய்லருக்கு பெருகும் வரவேற்பு! தீபாவளி தினத்தில் திரையரங்குகளில்...

ஏராளமான சர்வதேச விருதுகளை வென்ற ‘கிடா’ படத்தின் டிரெய்லருக்கு பெருகும் வரவேற்பு! தீபாவளி தினத்தில் திரையரங்குகளில் வெளியீடு.

Published on

சர்வதேச திரைப்பட விழாக்கள், கோவா பனோரமா சர்வதேச திரைப்பட விழா, சென்னை சர்வதேச திரைப்பட விழா என பலவற்றில், வெளியாவதற்கு முன்பே கலந்துகொண்டு பல்வேறு விருதுகளைக் குவித்த படம் ‘கிடா.’

பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கிய இந்த படம், மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும், ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. படத்தின் முழுமையான படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் நடந்துள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி இணைய ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபகாலமாக தொடர்ந்து வன்முறைக்களமாக இருக்கும் தமிழ் சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிமையான உணர்வுகளை, அழகாக சொல்லும் அற்புதமான வாழ்வியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. படம் மாறுபட்ட சினிமா அனுபவத்தை தரும் படைப்பாக இருக்குமென்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது.

இந்த படத்தை ‘ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ்’ நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைதன்யா தயாரித்துள்ளனர்.

படத்தின் கதை ஒரு தீபாவளி திருநாளில் நடைபெறுவதாக அமைந்துள்ளது. அந்த படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதையடுத்து படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படக்குழு:-
இசை – தீசன்
ஒளிப்பதிவு – எம். ஜெயப்பிரகாஷ்
கலை இயக்கம் – கே.பி. நந்து
பாடல்கள் – ஏகாதசி
எடிட்டர் – ஆனந்த் ஜெரால்டின்
ஆடியோகிராஃபி – தபஸ் நாயக்

Latest articles

பிரபல இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ‘வாரண்ட்’ சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா!

விலங்கு சீரிஸ், மாமன் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள வாரண்ட்...

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.

சென்னைஸ் அமிர்தா கல்லூரியின்  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார்.   விமான நிலையம் போன்ற நிஜ...

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில்,...

29 சினிமா விமர்சனம்

தன் காதலன் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதால் வெறுத்துப் போகும் காதலி பிரேக் அப் முடிவெடுக்கிறாள். வெறுக்கிற அளவுக்கு அவன்...

More like this