HomeGeneralகவிஞர் வைரமுத்து பங்கேற்பில் ‘பிரேக்ஃபாஸ்ட்' படத்தின் இசை வெளியீட்டு விழா!

கவிஞர் வைரமுத்து பங்கேற்பில் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

Published on

காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்.’ வரும் ஏப்ரல் 24ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் காந்தி கிருஷ்ணா, “இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் மிக சிறந்த முறையில் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்கள் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
கதாநாயகன் ராணவ், “ஒரு முதல் படத்தில் இது போன்று சிறந்த ஆளுமைகளான இயக்குநர் காந்தி கிருஷ்ணா, கவிப்பேரரசு வைரமுத்து, திரைப்பட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், டிஸ்ட்ரிபியூட்டர் குகன் ஆகியோரின் படங்களில் நான் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நான் மிகவும்  பாக்கியமாக கருதுகிறேன். என்னைப் போன்று எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவனுக்கு இது போன்ற வாய்ப்பு கிடைத்துள்ளது ஒரு மிகப்பெரிய பாக்கியமாகவும் ஆசீர்வாதமாகவும் பார்க்கின்றேன். இதை எனக்கு அளித்த காந்தி கிருஷ்ணன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி. ஊடக நண்பர்களுக்கு நன்றி. உங்களால் தான் இந்த படம் பொதுமக்களை சென்று சேர்த்து இருக்கிறது. படம் வெளியான பின்பும் திரையரங்குகளுக்கு சென்று இதே ஆதரவை நீங்கள் தர வேண்டும்” என்றார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், “எனக்கு முதல் முதலாக வாய்ப்பளித்த இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. நீங்களும், இயக்குநர் ஷங்கர் அவர்களும் எனக்கு அளித்த இந்த வாய்ப்பின் மூலம் நான் கற்றுக் கொண்ட பாடத்தில்தான் நானும் புதுமுக நடிகர்கள் நடிக்கின்ற படங்களில் இணைந்து வேலை செய்ய ஒப்புக்கொள்கிறேன்.
எனது துவக்க காலங்களில் எனக்கு பட வாய்ப்பு அளித்த அனைத்து இயக்குநர்களுடனும் நான் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுடன் நான் தொடர்ந்து இயங்க வேண்டும் என நினைத்தேன். அதனாலே இந்த படத்தில் நான் இணைந்து பணியாற்ற முன்வந்தேன். இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் வெற்றி பெற எனது சிறப்பான வாழ்த்துக்கள்” என்றார்.
கவிப்பேரரசு வைரமுத்து, “நான் நடிகர் நடிகைகளை நேரில் பார்த்ததில்லை. அப்படி பார்ப்பது என்பது வெற்றி விழாக்களில் மட்டும் இருந்தது. ஆனால், இப்பொழுது அப்படி இல்லை. இதுபோன்று பாடல் வெளியீட்டு விழாவில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இது ஒரு கொண்டாட்டம். நம்மை நாம் அறிமுகம் செய்து கொள்வதற்கும், நலம் நலம் விசாரிப்பதற்கும் இந்த மேடை பயன்படுவதாக தான் நினைக்கிறேன். இந்த மேடையைக் கூட்டிய நண்பர் காந்தி கிருஷ்ணாவிற்கு எனது நன்றி. நான் இப்பொழுது குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் பேச நினைக்கின்றேன் அதில், நண்பர் காந்தி கிருஷ்ணாவை எனக்கு முப்பது ஆண்டுகளாக தெரியும். நான் 46 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன்.அதில் முப்பது ஆண்டுகளாக காந்தி கிருஷ்ணாவை அறிவேன் என்றால், இந்த முப்பது ஆண்டுகளாக ஒருவர் இயக்குநராக இருந்து கொண்டிருக்கிறார் என்றால் அதுதான் காந்தி கிருஷ்ணாவின் பலம், ஆற்றல். மேலும், இந்த கலை உலகம் என்பது மாறிக்கொண்டே இருக்கிற ஒரு பிம்பம். இது ஓடிக்கொண்டே இருக்கிற ஒரு நுரை. இது வானவில்லை தனக்குள் வைத்து முடிந்து வைத்திருக்கின்றது. இதில் நிரந்தரமாக கால் நூற்றாண்டுக்கு மேல் ஒருவர் பயணிக்கிறார் என்றால் அவர்தான் அறிவுத் திறன் வாய்ந்தவன். பண்பாட்டுத் திறன் வாய்ந்தவன், கலை உலகைப் புரிந்து கொண்டவன் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த மூன்று பெருமைக்கும் உரியவர் எனது அருமை நண்பன் காந்தி கிருஷ்ணா என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
காந்தி கிருஷ்ணா முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் பிரேக் பாஸ்ட் என்று ஒரு படத்தை உங்களுக்கு வழங்க வந்திருக்கிறார் என்றால் அவரின் கால நீட்சியை நான் போற்றுகிறேன்.
காலம் மாறுகின்ற பொழுது தானும் மாறிக் கொள்ளாத வரை காலம் கருணை இல்லாமல் விட்டு விட்டு போகிறது. ஆனால் எனது நண்பர் காந்தி கிருஷ்ணா தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவரோடு இந்த முப்பது ஆண்டுகளாக நான் இருக்கிறேன் என்பதால் என்னையும் அவர் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது மகிழ்ச்சி.
காந்தி கிருஷ்ணாவை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கும் நிலையில் இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் கருப்பொருள் பழையலாகாத கருப்பொருள், இது நேற்று வெளிவந்திருக்க வேண்டிய படம்,  இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் செய்தி ஆண் பெண் உறவு குறித்து. ஒரு ஆண் பெண்ணை புரிந்து கொள்வதும், ஒரு பெண் ஆணை புரிந்து கொள்வதும், ஆண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் பெண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் இருக்கவே செய்யும். நீங்கள் புரிந்து கொண்ட ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணோடு ஒப்பிட்டு புரிந்து கொள்வதாக. ஒரு ஆணை புரிந்து கொண்ட  ஒரு பெண் அதே அளவுகோலை வைத்து, இன்னொரு ஆணை புரிந்து கொள்ள முடியாது. கணவனை வைத்து  தந்தையையோ, தந்தையை வைத்து  தனையனையோ, தமையனையோ ஒரு பெண் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு பெண்ணும் ஒரு உலகம் . ஒவ்வொரு ஆணும் ஒரு உலகம். அவர்களை  புரிந்து கொள்ள முடியாது. பெண் ஆணை புரிந்து கொள்ளும் வரைக்கும் ஆண் பெண்ணை புரிந்து கொள்ளும் வரைக்கும், கலை இருக்கும்.
இந்தக் கலைகளும் இலக்கியங்களும் இருக்கும் வரைக்கும் ஆண் பெண் புரிதல் என்று ஒரு மிகப்பெரிய சங்கிலி அறிந்து விடாமல் ஓடிக்கொண்டே இருக்கும் என நான் நம்புகிறேன். அதைத்தான் எனது நண்பர் இந்த படத்தில் செய்திருக்கிறார். நடித்தல் என்பது நடுத்தல் அல்ல இருத்தல், அப்படி இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். ஆனால், இந்தப் படத்தின் தலைப்பு தனக்கு பிடிக்கவில்லை. தமிழில் பெயர் வைத்திருக்கலாம். இதனை குறையாக சொல்லவில்லை எனது ஆதங்கமாக கூறுகிறேன். மொழி என்பது ஒரு குறியீடு. அதனால், தமிழில் எடுக்கும் படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என நான் அன்போடு வேண்டுகோள் வைக்கிறேன்.
திருமணம் செய்து கொண்டது தப்பா சரியா என்பதே இந்த படத்தின் கருப்பொருள். திருமணம் என்பது முற்றுகை இடப்பட்ட ஒரு கோட்டை.உள்ளே இருப்பவர்கள் வெளியே வர துடிக்கிறார்கள். வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல துடிக்கிறார்கள். இதுதான் இந்தத் திரைப்படத்திலும் நிகழ்ந்துள்ளது.  காந்தி கிருஷ்ணா இதை அருமையாக படமாக்கி உள்ளார். கிருஷ்ணாவிடம் இன்னும் நிறைய சரக்கு இருக்கிறது. சமுதாய அக்கறை இருக்கிறது. பாத்திரங்களை வடித்தெடுக்கக்கூடிய நேர்த்தி இருக்கிறது.  பாத்திரங்கள் எது மட்டும் பேசலாம் என்ற அளவீடு தெரிகிறது. எனவே காந்தி கிருஷ்ணா தொடர்ந்து படம் எடுக்க வேண்டும். தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். இந்த படத்தின் நடித்தவர்கள் புகழ் பெற வேண்டும்” என்றார்.
நடிகை அமிதா, “காதலிப்பது எல்லோருக்கும் எளிது. ஆனால், அந்த காதலில் நிலைத்து நிற்பது கடினம். ஏன் என்றால் நம் எல்லோரிடமும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை நிரப்ப நம் தாயின் அன்பை துணையிடம் தேடும்போது தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. திருமணம் ஆன தம்பதி நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். சின்ன ஈகோ கூட எப்படி பெரிய பிரச்சினையாக மாறுகிறது என்பதை இந்தக் கதை சொல்லும்” என்றார்.
நடிகர் ரியோ, நடிகர் பரத், நடிகர் மைம் கோபி, தயாரிப்பாளர் வரதராஜன், நடிகர் க்ருத்கிக் மோகன், டிஸ்ட்ரிபியூட்டர் குகன், இயக்குநர் வசந்த பாலன், நடிகை ரோஸ்மின், எடிட்டர் பாஸ்கர் உள்ளிடோர் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Latest articles

பருந்து சினிமா விமர்சனம்

சமூகத்துக்கும், உரிய வயதும் பக்குவமும் இல்லாமல் காதலிக்கிறவர்களுக்கும் கருத்து சொல்கிற படம். மதுரைப் பக்கமுள்ள ஒரு கிராமத்தில் ஒரு வசதியான...

காவேரி மருத்துவமனையின் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளுக்கான ‘சமத்வா’ சிறப்பு மையத்தை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார்!

உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற பிரச்சனைகளுக்கு விரிவான, ஒருங்கிணைந்த சிகிச்சை, அத்துடன் வாழ்க்கை முறை மாற்றத்திற்கான பிரத்யேக...

சூனியக்காரி, தேவதை, ப்ளாக் ஹோல்… ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=bKJve0D7p-Y GM Morgan Films தயாரிப்பில், R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ (Drones). சித்தி...

SharonPly Honours Five Masters of Woodcraft at Seventh I AM STRONGEST Awards!

CARVED IN STRENGTH celebrates artisans preserving generations of craftsmanship while adapting traditional woodcraft for...

More like this

பருந்து சினிமா விமர்சனம்

சமூகத்துக்கும், உரிய வயதும் பக்குவமும் இல்லாமல் காதலிக்கிறவர்களுக்கும் கருத்து சொல்கிற படம். மதுரைப் பக்கமுள்ள ஒரு கிராமத்தில் ஒரு வசதியான...

காவேரி மருத்துவமனையின் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளுக்கான ‘சமத்வா’ சிறப்பு மையத்தை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார்!

உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற பிரச்சனைகளுக்கு விரிவான, ஒருங்கிணைந்த சிகிச்சை, அத்துடன் வாழ்க்கை முறை மாற்றத்திற்கான பிரத்யேக...

சூனியக்காரி, தேவதை, ப்ளாக் ஹோல்… ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=bKJve0D7p-Y GM Morgan Films தயாரிப்பில், R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ (Drones). சித்தி...