HomeCinemaபடம் பார்க்க வருபவர்கள் இரண்டு மணி நேரம் சிரித்து விட்டுப் போகலாம்! -'கருப்பு பெட்டி' பட...

படம் பார்க்க வருபவர்கள் இரண்டு மணி நேரம் சிரித்து விட்டுப் போகலாம்! -‘கருப்பு பெட்டி’ பட இயக்குநர் உறுதி

Published on

கதைக்கு முக்கியத்துவமுள்ள படங்கள் வெற்றி பெற்று வருகிற சூழலில் அதே விதமான படமாக தயாராகியிருக்கிறது ‘கருப்பு பெட்டி.’ ஜேகே ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ்’ கே.சி.பி. மிதுன் சக்ரவர்த்தி தயாரித்துள்ள இந்த படத்தில் கதைநாயகனாக பரபரப்பான அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் கே.சி.பிரபாத். அவருக்கு ஜோடியாக தேவிகா வேணு நடித்துள்ளார்.

இந்த படம் வரும் அக்டோபர் 18-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”குடும்பஸ்தனான நாயகனுக்கு ஏற்படும் ஒரு சாதாரண பிரச்சினை அவரது குடும்பத்துக்குள் என்ன மாதிரியான விளைவுகளைக் கொண்டு வருகிறது என்பதுதான் கதை. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ளோம்.

மனரீதியான பிரச்சினை ஒன்றை இதில் பேசியிருக்கிறோம். விமானத்துக்கும், அதன் இயக்கத்தையும் பதிவு செய்கிற கருவி கருப்பு பெட்டி. அதே போன்று இந்தக் கதையிலும் கருப்பு பெட்டி போன்ற முக்கியமான ஒன்றுதான் கதையில் ட்விஸ்ட்டாக இருக்கிறது. அதனால் இந்தத் தலைப்பை வைத்துள்ளோம்.

படம் பார்க்க வரும் பார்வையாளர் மனம் விட்டு இரண்டு மணி நேரம் சிரித்து விட்டு போகலாம். ஏனென்றால் படம் திரையில் ஓடும் நேரமும் இரண்டு மணி நேரம்தான்” என்றார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கே.சி. பிரபாத் ‘பில்லா பாண்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர். அந்த படத்தை தயாரித்ததோடு, படத்தின் திருப்புமுனையான வில்லன் வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘தேவராட்டம்’, ‘புலிக்குத்தி பாண்டி’, ‘அங்காரகன்’, ‘யாமம்’ ஆகிய படங்களில் நடித்து வருபவர்.

பட வெளியீட்டையொட்டி கருப்பு பெட்டி பட விளம்பர வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விளம்பர சுவரொட்டிகளில் கே.சி.பிரபாத் மற்றும் கதாநாயகி இருவரும் கைவிலங்குடன் நீதிமன்றத்தில் நிற்பது போன்ற புகைப்படங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

”முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருக்கும் இப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாக இருக்கும்” என்கிறார் கதை நாயகன் கே.சி. பிரபாத்.

படத்தில் சரவண சக்தி, சித்தா ஆர்.தர்ஷன், தேவிகா வேணு, அனிதா, கீர்த்தி, நிஷா, சர்மிளா, கண்ணன், ராஜதுரை, சிற்றரசு, காமராஜ், சாய் வைரம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

படத்தை தென்னிந்தியா முழுவதும் கே.சி.பி. புரொடக்க்ஷன்ஸ் வெளியிடுகிறது.

படக்குழு:-
இசை: அருண்
பாடல்கள்: சிற்றரசு
ஒளிப்பதிவு: ஆர்.மோசச் டேனியல்
படத்தொகுப்பு: பாலசிவா
கலை இயக்குநர்: திவாகர்
சண்டைக்காட்சி: ரவிராஜா
நடனம்: மாஸ்டர் சக்ரவர்த்தி

Latest articles

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ்...

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...

கருப்பு சினிமா விமர்சனம்

காவல்துறையும் நீதித்துறையும் நேர்மையாக செயல்படுவதில்லை என்கிற மோசமான சூழ்நிலையை மாற்ற கருப்பு சாமி, கருப்பு கோட் அணிகிற கதை. ஒரு...

More like this