HomeCinemaரிஷப் ஷெட்டி நடிக்கும் ‘ஜெய் ஹனுமான்’ பூஜையுடன் துவங்கியது! ஹனுமான் பிறந்த ஹம்பி அஞ்சனாத்ரியில் நடந்த...

ரிஷப் ஷெட்டி நடிக்கும் ‘ஜெய் ஹனுமான்’ பூஜையுடன் துவங்கியது! ஹனுமான் பிறந்த ஹம்பி அஞ்சனாத்ரியில் நடந்த உற்சாக விழா.

Published on

தேசிய விருது பெற்ற நடிகர் ரிஷப் ஷெட்டி கடவுள் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படம் பாரம்பரிய பூஜையுடன் பிமாண்டமாக துவங்கியது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற ‘ஹனுமேன்’ திரைப்படத்தின் சீக்வலாக இந்த படம் உருவாகிறது.

பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த கட்டமாக உருவாகும் இந்தப் படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க, டி- சீரிஸ் நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது.

தேசிய விருது பெற்ற திறமையாளர்கள் இந்தப் படத்தில் ஒன்றிணைவது, ‘ஜெய் ஹனுமான்’ படம் மீதான எதிர்பார்ப்பை நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. சமகால நிகழ்வுகளை புராணங்களுடன் இணைத்து துணிச்சலாகவும் புதுமையாகவும் கதை சொல்வதில் தேர்ந்தவர் இயக்குநர் பிரசாந்த் வர்மா. அதுபோலவே, இந்தப் படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறது. ’காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரிஷப் ஷெட்டி அடுத்து என்ன படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இவை அனைத்தும் ‘ஜெய் ஹனுமான்’ படம் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

கடவுள் ஹனுமான் பிறந்த புனித தலமாக நம்பப்படும் கர்நாடக மாநிலம் ஹம்பி, விஜயநகரில் உள்ள அஞ்சனாத்ரி பெட்டா மலைப்பகுதியில் இன்று பாரம்பரிய பூஜையுடன் படம் துவங்கப்பட்டது. டி-சீரிஸ் நிறுவனத் தலைவர் பூஷன் குமார் கிளாப் அடித்து துவக்கி வைத்தார். அனில் ததானி கேமராவை இயக்க, முதல் ஷாட்டை ’ஹனுமேன்’ படத்தின் ஹீரோ தேஜா சஜ்ஜா இயக்கினார். மேலும், அனில் ததானி, பூஷன் குமார், நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் ஆகியோர் இணைந்து திரைக்கதையை இயக்குநர் பிரசாந்த் வர்மாவிடம் கொடுத்தனர். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வழக்கமான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

கடவுள் ஹனுமானாக ரிஷப் ஷெட்டி இடம்பெற்றிருக்கும் முதல் பார்வை போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த கதாபாத்திரத்தில் சக்திவாய்ந்த, ஆழமான, ஆன்மிக அனுபவத்தை தரும் வகையில் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு தனது தோற்றத்தை கட்டமைத்துள்ளார் ரிஷப் ஷெட்டி.

‘ஜெய் ஹனுமான்’ கலியுகத்தை பின்னணியாகக் கொண்ட அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிறது. பக்தி, நம்பிக்கை, சக்தி ஆகியவற்றை ‘ஜெய் ஹனுமான்’ படம் பிரதிபலிக்கும். ஹனுமானின் ’மௌனம் உன்னதமான நோக்கத்தை குறிக்கிறதே தவிர அது சரணாகதி அல்ல! எழுச்சி’ என்பதை படம் மையக்கருவாகக் கொண்டிருக்கிறது.

Latest articles

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் மனதுக்கு நெருக்கமானது” -நடிகை ஸ்ரீதேவி!

படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நடிகர்களின் மனதை விட்டு எளிதில் நீங்குவதில்லை. நடிகை ஸ்ரீதேவிக்கு ‘ஹைக்கூ’ திரைப்படம்...

ஹைக்கூ திரைப்படத்தில் என்னுடையது பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரம்! -நடிகை ஃபெமினா ஜார்ஜ்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகை ஃபெமினா ஜார்ஜ், ‘ஹைக்கூ’ படத்தின் மூலம் ஆழமான...

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் ‘பரிபாடி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

https://www.youtube.com/watch?v=cfHo9hBpas8 ‘பனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் புதிய படமான ‘பரிபாடி’ படத்தின் ஃபர்ஸ்ட்...

உற்சாகமாக நடந்த யோகி பாபு நடித்துள்ள ‘சிங்காரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

ராக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தை இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ளார். ஏ.எஸ்....

More like this