HomeCinemaஇந்த படத்தில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளோம்! --'ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி' படத்தின் டிரெய்லர்...

இந்த படத்தில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளோம்! –‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சந்தோஷ் ரயான் பேச்சு

Published on

மாறுபட்ட களத்தில், இன்வஸ்டிகேசன் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் சந்தோஷ் ரயான், இந்த படத்தை தயாரித்த சையத் தமீன் அவர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு முழு ஆதரவைத் தந்த லால் தேவ் சகாயம் சாருக்கு நன்றி. சரவணன் மசூத் இருவருக்கும் நன்றி. ஆஷிகா அசோகன் மிக முக்கியமான பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார். இன்னொரு ஹீரோயின் ஐஸ்வர்யா எப்போது சார் படம் வரும் எனக்கேட்டுக் கொண்டே இருந்தார். சூப்பராக நடித்துள்ளார். வில்லன் நடிகர் சினான் மிக நன்றாக நடித்துள்ளார். கௌதம் எனக்காக பல கஷ்டங்களை பொறுத்துக்கொண்டு அருமையான இசையைத் தந்துள்ளார். சந்தீப் மிக நன்றாக எடிட் செய்துள்ளார். ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி, இது நம் நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது நம் தனிமனித ஒழுக்கத்தால் தான் மாறும், அதை இந்தப்படம் அழுத்தமாக பேசும். பெண் பிள்ளைகள் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளோம். எங்களைப் போன்ற புதியவர்களின் முயற்சிக்கு ஆதரவு தந்து தியேட்டரில் படம் பாருங்கள் நன்றி” என்றார்.

தயாரிப்பாளர், நடிகர் JSK சதீஷ் ”இந்த விழா மிக சரியாக நடக்கிறது. படக்குழு மிகத் தெளிவாக எல்லாவற்றையும் செய்கிறார்கள். இப்படத்தை தயாரித்த சையத் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பிஸினஸ் பற்றி தெரிந்து, துணிந்து நல்ல படத்தை எடுத்துள்ளார். படம் நான் பார்த்து விட்டேன், இயக்குநர் சந்தோஷ் முதல் படம் போல் இல்லாமல் அருமையாக எடுத்துள்ளார். மியூசிக் எடிட்டிங் எல்லாம் நன்றாக உள்ளது. நடித்த அனைவருமே மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். இது போன்ற புதிய படத்தின் விழாவிற்கு வருகை தந்து ஆதரவு தரும் பாக்யராஜ் சாருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நன்றி. இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் ”தயாரிப்பாளர் சதீஷ் படம் பார்த்ததாக சொன்னார். அவர் சமீபத்தில் செய்த படம் இந்திக்கு ரீமேக் ஆகிறது. இப்போதெல்லாம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தால் தான் ரீமேக் செய்கிறார்கள். அவர் படம் பார்த்து நன்றாக இருப்பதாக சொல்வது படத்திற்கு கிடைத்துள்ள பெரிய பாராட்டு. தயாரிப்பாளர் சையத், இயக்குநர் சந்தோஷ், மற்றும் படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள். சந்தோஷ் என்னை அழைக்கும் போது, படத்தின் அவுட்லைன் சொன்னார், யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இருந்தாலும், மிகத் தெளிவாக கதை சொன்னார். அதிலேயே அவர் திறமை தெரிந்தது. இங்கு தயாரிப்பாளர் கதை சொன்னது இன்னும் அருமையாக இருந்தது. க்ரைம் சப்ஜெக்ட் எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட், நான் அதிகம் கரைம் ஆக்சன் படங்கள் தான் பார்ப்பேன். முதல் படத்திலேயே சந்தோஷ் அருமையாக இதை எடுத்துள்ளார். இந்தப்படம் யார் நடித்திருக்கிறார் என்பதை விட, என்ன மாதிரி கதையை எடுத்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம். நானும் இப்படம் பார்க்க ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் ஆடியன்ஸ் ரிவ்யூ வந்த பிறகு நன்றாக இருந்தால், படத்திற்கு போகலாம் என நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். எனவே பத்திரிக்கையாளர்கள் இம்மாதிரி சின்ன படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் தந்து ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.

Latest articles

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

https://www.youtube.com/watch?v=jKEjOHlUAdo சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்”...

ஜெயராம் –அஷ்வின் நடிக்கும் குட் நியூஸ் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

https://www.youtube.com/watch?v=jKEjOHlUAdo சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்”...

விக்கல்ஸ் விக்ரம் – ஆரத்தி கிருஷ்ணா நடிக்கும் லைட் வெயிட் பேபி படத்தின் படப்பிடிப்பு நிறைவு… ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! 

ஸ்டாண்ட் -அப் காமெடியன் 'விக்கல்ஸ்' விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும்...

More like this