HomeCinema'ஜூடோபியா 2' படத்தின் தைரியமான காவல்துறை அதிகாரி ஜூடி ஹாப்ஸிக்கு இந்தியில் குரல் கொடுத்திருக்கிறார் நடிகை...

‘ஜூடோபியா 2’ படத்தின் தைரியமான காவல்துறை அதிகாரி ஜூடி ஹாப்ஸிக்கு இந்தியில் குரல் கொடுத்திருக்கிறார் நடிகை ஷ்ரதா கபூர்!

Published on

டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்படும், நவம்பர் 28 அன்று வெளியாகும் ‘ஜூடோபியா 2’ படத்தின் இந்தி வெர்ஷன் அறிவிப்புக்காக நடைபெற்ற பத்திரிகையாளர் சிறப்பு சந்திப்பில், தைரியமான காவல்துறை அதிகாரியான ஜூடி ஹாப்ஸூக்கு இந்தியில் குரல் கொடுத்தது பற்றி, காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை தான் ஆழமாக உள்வாங்கிக் கொண்டது பற்றி ஷ்ரதா பேசினார், “ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்திற்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவள் தன் நிலையில் உறுதியாக இருந்ததை நிச்சயமாக என்னால் புரிந்துகொள்ள முடியும். அவள் அதிகாரம் மிக்கவள், தேவைப்படும் தருணத்தில் மென்மையாகவும் இருப்பாள். ஜூடியாக இருந்தது மகிழ்ச்சி!”

மேலும் ஒரு அனிமேஷன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் கிரியேட்டிவ் புராசெஸ் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, “அனிமேஷன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தது மிகவும் வித்தியாசமான அனுபவம். வேடிக்கையாகவும் கூலாகவும் இருக்கும் கதாபாத்திரத்திற்கு நான் குரல் கொடுத்தது சுவாரஸ்யமாக இருந்தது. அவளுக்குப் பொருந்தும்படி என் குரலை மாற்றியமைக்க வேண்டியிருந்தது. அவள் கோபம், வேடிக்கை என எல்லாவற்றையும் கவனித்து அதற்கேற்ப குரல் கொடுத்தேன். நீங்கள் உண்மையிலேயே அந்தக் கதாபாத்திரத்தின் குரலாக இருக்க வேண்டும்” என்றார்.

இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக திரையிடல் இருந்தது. அங்கு ஷ்ரத்தா கபூர் ஜூடி ஹாப்ஸின் ஆளுமையை, ஆற்றலை, விடாமுயற்சியை தன் குரல் வழியே முழுமையாக வெளிப்படுத்தியதை பத்திரிகையாளர்கள் கண்டனர்.

‘ஜூடோபியோ 2’ நவம்பர் 28 ஆம் தேதி இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this