HomeCinemaஅட்வென்சர், எமோஷனல் ஃபேமிலி கதை என இரண்டையும் சரியாக டேவிட் கையாண்டிருக்கிறார்! -டேவிட் கோப்பின் திரைக்கதை...

அட்வென்சர், எமோஷனல் ஃபேமிலி கதை என இரண்டையும் சரியாக டேவிட் கையாண்டிருக்கிறார்! -டேவிட் கோப்பின் திரைக்கதை பற்றி இயக்குநர் கேரத் எட்வர்ட்ஸ் பெருமிதம்

Published on

ஜுராசிக் உலகத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அடுத்த அத்தியாயமான ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த் ஜூலை 4, 2025 அன்று இந்தியாவில் வெளியாகிறது. உலகம் முழுவதும் ஜூலை 2 அன்று வெளியாகிறது.

மூச்சடைக்க வைக்கும் பிரமாண்டமான காட்சிகள் மற்றும் கதைக்களம் என இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இது உள்ளது. எம்மி விருது வென்ற கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் அட்வென்ச்சர் படத்தில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி, லூனா பிளேஸ், ரூபர்ட் ஃப்ரெண்ட்எட் ஸ்க்ரீன் மற்றும் டேவிட் லாகோனோ ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதை ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்குப் பிறகு வருகிறது. அங்கு மீதமுள்ள டைனோசர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அங்கு தன் இனத்தைப் பெருக்கி இருக்கிறது. அந்தச் சூழலில் இருக்கிற மிகப் பிரம்மாண்டமான மூன்று டைனோசர்கள், மனித இனத்துக்கு அதிசயிக்கத்தக்க உயிர்காக்கும் நன்மைகளைக் கொண்டுவரப்போகும் ஒரு மருந்தின் திறவுகோலைக் கொண்டிருக்கின்றன. இதில் நடிகர் ஜொனாதன் பெய்லி தொல்லுயிரியலாளர் டாக்டர் ஹென்றி லூமிஸாகவும் நடிகர் ஸ்கார்லெட் ஜோஹன்சன் திறமையான இரகசிய செயல்பாட்டு நிபுணர் ஜோரா பென்னட்டாகவும் நடித்துள்ளார்கள்.

அவர் உலகின் மூன்று மிகப் பெரிய டைனோசர்களிடமிருந்து மரபணுப் பொருளைப் பாதுகாப்பதற்கான ஒரு உயர் ரகசிய பணியில் திறமையான குழுவை வழிநடத்துகிறார். இது ஒரு குடும்பத்தை பாதிக்கிறது. அந்த குடும்பம் எதிர்பாராத விதமாக ஒரு தீவில் சிக்கித் தவிக்கிறார்கள். அங்கு அவர்கள் பல தசாப்தங்களாக உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.

டேவிட் கோப்பின் திரைக்கதை பற்றி இயக்குநர் கேரத் எட்வர்ட்ஸ் பகிர்ந்து கொண்டதாவது, “மிஷன் ஸ்டோரியாகத் தொடங்கும் இது சில காரணங்களால் சர்வைவல் கதையாக மாறுகிறது. இருந்தாலும் அட்வென்சர் மற்றும் எமோஷனல் ஃபேமிலி கதை என இந்த இரண்டையும் சரியாக டேவிட் கையாண்டிருக்கிறார். கடல், நிலம் மற்றும் காற்று என பல விதமான சூழல்களில் இந்தக் கதை பயணிக்கிறது. ஒவ்வொரு சூழலிலும் ஒரு சிறுகதைக்கான பரபரப்பும் எமோஷனும் இருக்கும். இது ஜாஸ் போலவும், மற்ற நேரங்களில் இந்தியானா ஜோன்ஸ் போலவும் இது இரண்டிற்கும் இடையில் டேவிட் அட்டன்பரோ படம் போல இயற்கையை கம்பீரமாகக் காட்டி இருக்கிறது.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த திரைக்கதையைப் படிக்கும்போது ஜுராசிக் பார்க்கில் டைனோசர் தாக்குதல் நடத்துவது போன்ற தீவிரமான சூழல் அமைவதற்கான வாய்ப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் டேவிட்டின் ஸ்கிரிப்ட் நான் நினைத்ததை விடவும் பல வாய்ப்புகளை வழங்கியதால் நான் உற்சாகமடைந்தேன்” என்றார்.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this