HomeCinemaபடத்திலுள்ள நான்கு சண்டையிலும் 'ஜின்- தி பெட்'டிற்குதான் முக்கியத்துவம் இருக்கும். அது என்ன என்பதை நீங்கள்...

படத்திலுள்ள நான்கு சண்டையிலும் ‘ஜின்- தி பெட்’டிற்குதான் முக்கியத்துவம் இருக்கும். அது என்ன என்பதை நீங்கள் படத்தில் பாருங்கள்! -‘ஜின் – தி பெட்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் நாயகன் முகேன் ராவ்  

Published on

பிக் பாஸ் முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் காமெடி ஹாரர் படம் ‘ஜின் – தி பெட்.’ இந்த படம் மே 30-ந்தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நீதியரசர் எஸ் கே கிருஷ்ணன்ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரி பன்னீர் செல்வம் ஐபிஎஸ்ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுதயாரிப்பாளர் கேயார்ஃபெப்சி தலைவர் ஆர்.கேசெல்வமணி,  இயக்குநர் சங்க தலைவர் ஆர்விஉதயகுமார் , செயலாளர் பேரரசு , துணைத் தலைவர் ஆர்.அரவிந்தராஜ்கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்தமிழ்நாடு திரைப்பட கல்லூரியின் முதல்வரும் இயக்குநருமான திருமலை வேந்தன் வரவேற்றார்.
நிகழ்வில் பேசிய நடிகர் முகேன் ராவ், ”இயக்குநர் டி ஆர் பாலாவுடன் ‘ஒற்றைத் தாமரை’ என்ற வீடியோ ஆல்பத்தில் இணைந்து பணியாற்றிருக்கிறேன். என்ன தேவை என்பதில் அவரிடம் ஒரு தெளிவு இருக்கும். இந்த ‘ஜின்’ படத்திலும் அவருக்கு என்ன தேவையோ, அதனை நடிகர்களிடமிருந்து பெற்றார். அவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். இதற்காகவே அவரை நான் மனதார பாராட்டுகிறேன். இயக்குநரின் பெற்றோர்களான வேந்தன்-ராஜேஸ்வரி தம்பதிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடக்கத்தில் விவேக் மெர்வின் என்பது ஒருவர் என நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகுதான் அவர்கள் இருவர் என்று தெரிந்துகொண்டேன். ஏராளமான ஹிட் பாடல்களை வழங்கியுள்ளார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் நான்கு சண்டைக் காட்சிகள். சண்டைக் காட்சிகளில் நடிக்கவேண்டும் என்று ஆசை இருந்தது. இந்த திரைப்படத்தில் உள்ள நான்கு சண்டையிலும் ‘ஜின்- தி பெட்’டிற்குதான் முக்கியத்துவம் இருக்கும். அது என்ன? என்பதை நீங்கள் திரையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன். சில படங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளது. அது தொடர்பான விவரங்கள் விரைவில் உங்களுக்கு தெரியவரும்” என்றார்.
இந்த படத்தில் பவ்யா தரிகாடத்தோ ராதாரவிபால சரவணன்இமான் அண்ணாச்சிநந்து ஆனந்த், வடிவுக்கரசி, ’நிழல்கள்‘ ரவி, வினோதினி வைத்தியநாதன்ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்

Latest articles

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

இரு மாநில எல்லையில் நடக்கும் விறுவிறுப்பான காதல் கதையில் உருவான ஆலி’ தமிழ், மலையாள மொழிகளில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது!

முற்றிலும் புதிய முகங்களின் பங்களிப்போடு உருவான 'ஆலி'  திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் ஆகஸ்ட் 14-ம்...

மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படத்தின் டீசர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=EFI-xLTY9yU   டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி...

நியூஸ் 7 தமிழ் விருது வழங்கும் விழா – ஜி கே எம் தமிழ்குமரன் விருதுகள் வழங்கி வாழ்த்துரை!

‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி நடத்திய Business excellence award 2026  விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஹயாத்...

More like this