HomeCinemaஇறைவன் நல்ல நல்ல படைப்புகளை என்னை நோக்கி அனுப்பி வைக்கிறார்! -‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' முதல்...

இறைவன் நல்ல நல்ல படைப்புகளை என்னை நோக்கி அனுப்பி வைக்கிறார்! -‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ முதல் பாடல் வெளியீட்டு விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேச்சு

Published on

எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிக்க, பான் இந்திய படைப்பாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.’

இந்த படம் தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள நிலையில், ‘மாமதுர’ என்ற படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் சென்னையில் நடந்தது.

எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

‘மாமதுர’ பாடலை இன்று மதியம் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் இணையத்தில் வெளியிட்டார்.

நிகழ்வில் எஸ் ஜே சூர்யா, ‘‘எல்லைகளைத் தாண்டி ரசிகர்களை சென்றடையும் விஷயம் இப்படத்தில் உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் படம் எந்த அளவு எதிர்பார்ப்புகளை உருவாக்கும் என்று நான் பார்த்துள்ளேன். லாரன்ஸ் சார் நல்ல மனிதர். இந்த படத்தில் அவருடன் பணியாற்றியது ரொம்ப சந்தோஷம். கார்த்திக் சுப்பராஜ் சார் படைப்பும் காட்சிகளும் அப்படி இருக்கும். இறைவன் நல்ல நல்ல படைப்புகளை என்னை நோக்கி அனுப்பி வைக்கிறார். நான் இங்கு ஒரு நல்ல நடிகனா இருப்பதற்கு கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘இறைவி’ படம் மிகப்பெரிய காரணம். இந்த படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது” என்றார்.

நடிகர் ராகவா லாரன்ஸ், ‘‘எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மேல் அன்பு செலுத்தும் என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. ‘ஜிகர்தண்டா 1’ நான் நடிக்க வேண்டியது. கதிரேசன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் கதை சொன்னார்கள். தெலுங்கு படத்தில் நான் பணியாற்றிக் கொண்டு இருந்ததால் அப்போது மிஸ் பண்ணிவிட்டு கவலைப்பட்டேன். அதற்கு கடவுள் கொடுத்த வாய்ப்பு தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.’ கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கி உள்ளார். படப்பிடிப்பு நடைபெற்ற இடம் ஒன்றில் மக்களுக்காக சாலை அமைத்து தந்துள்ளார்கள். அடுத்தவர்களுக்கு உதவிய காரணத்திற்காகவே இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும். எஸ் ஜே சூர்யா சாருடன் நடித்தது மகிழ்ச்சி” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், ‘‘ ‘பேட்ட’ படத்திற்கு பிறகு இந்த படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்று நினைக்கிறேன். ‘பீட்சா’ இசை வெளியீட்டுக்கு சத்யம் தியேட்டருக்கு வந்தேன். அந்த மாதிரி உணர்வை இப்போது எனக்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தருகிறது. இந்தப் படத்தை பற்றி நான் அதிகம் பேசமாட்டேன். நீங்கள் பேசுவீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ‘‘நான் பணியாற்றிய படங்களில் மிகவும் பிடித்தவற்றில் இதற்கு தனி இடம் உண்டு. இந்த படம் வேறு மாதிரி இருக்கும்” என்றார்.

படத்தை தயாரித்த ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், ‘‘ ‘ஜிகர்தாண்டா 1’ தேசிய விருது பெற்றது. ஜிகர்தாண்டா டபுள் எக்ஸும் அதேபோல் தேசிய விருது பெறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

படக்குழு:-
தயாரிப்பு: கார்த்திகேயன் சந்தானம், எஸ். கதிரேசன்
அசோசியேட் தயாரிப்பாளர்: அலங்கார் பாண்டியன்
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடல்கள்: விவேக், முத்தமிழ் ஆர்.எம்.எஸ்
ஒளிப்பதிவு: எஸ். திருநாவுக்கரசு
படத்தொகுப்பு: ஷஃபிக் முகமது அலி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: டி. சந்தானம்
சண்டைப் பயிற்சி: திலிப் சுப்புராயன்
கலை இயக்கம்: பாலசுப்ரமணியன், குமார் கங்கப்பன்
நடன அமைப்பு: ஷெரிப் எம், பாபா பாஸ்கர்
ஒலி வடிவமைப்பு: குணால் ராஜன்
ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா
ஒப்பனை: வினோத். எஸ்
ஆடைகள்: சுபேர்
ஸ்டில்ஸ்: எம். தினேஷ்
வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர்: எச். மோனேஷ்
கலரிஸ்ட்: ரங்கா
பப்ளிசிட்டி டிசைன்ஸ்: ட்யூனி ஜான்
டீசர் கட்: ஆஷிஷ்
சவுண்ட் மிக்ஸ்: சுரேன். ஜி
ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர்: கணேஷ் பி.எஸ்
தயாரிப்பு நிர்வாகி: ஜி. துரைமுருகன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: ராஜ்குமார்
தயாரிப்பு மேலாளர்கள்: என். சண்முக சுந்தரம், ரங்கராஜ் பெருமாள்
நிர்வாகத் தயாரிப்பாளர்: அசோக் நாராயணன். எம்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...