HomeCinemaஜெயம் ரவியின் 34-வது படத்தை ஸ்க்ரீன் சீன் மீடியா தயாரிக்க 'டாடா' கணேஷ் கே பாபு...

ஜெயம் ரவியின் 34-வது படத்தை ஸ்க்ரீன் சீன் மீடியா தயாரிக்க ‘டாடா’ கணேஷ் கே பாபு இயக்குகிறார்!

Published on

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், வெற்றிப்பட இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ‘பிரதர்’ திரைப்படத்தை, ‘இருட்டு’, ‘தாராள பிரபு’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘இடியட்’, ‘சாணி காயிதம்’, ‘அகிலன்’ உள்ளிட்ட வெற்றி படங்களையும் ‘மத்தகம்’ இணைய தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது.

இந்த படம் தீபாவளியன்று உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில், ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைகிறது.

ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘ஜெ ஆர் 34’ என்று அழைக்கப்படும் ஜெயம் ரவியின் 34-வது படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளது. ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஜெயம் ரவி உடன் ஸ்கிரீன் சீன் நிறுவனம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘பிரதர்’ திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் ‘ஜெ ஆர் 34’ திரைப்படத்திற்காக ஸ்கிரீன் சீன் மீடியா மற்றும் ஜெயம் ரவியுடன் ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் கைகோர்க்கிறார்.

டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.

Latest articles

பிரபல இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ‘வாரண்ட்’ சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா!

விலங்கு சீரிஸ், மாமன் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள வாரண்ட்...

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.

சென்னைஸ் அமிர்தா கல்லூரியின்  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார்.   விமான நிலையம் போன்ற நிஜ...

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில்,...

29 சினிமா விமர்சனம்

தன் காதலன் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதால் வெறுத்துப் போகும் காதலி பிரேக் அப் முடிவெடுக்கிறாள். வெறுக்கிற அளவுக்கு அவன்...

More like this