HomeCinema'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் டிரெய்லர் தென்னிந்தியாவில் இந்த வாரம் வெளியான மிகப்பெரிய படங்களுடன் 1500க்கும்...

‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் டிரெய்லர் தென்னிந்தியாவில் இந்த வாரம் வெளியான மிகப்பெரிய படங்களுடன் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது!

Published on

‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதி டிரெய்லர் வரும் அக்டோபர் 25-ம் தேதி வெளியாக உள்ளது. ஆனால், அதற்கு முன்பே இப்போது தென்னிந்தியாவில் இந்த வாரம் வெளியான மிகப்பெரிய படங்களுடன் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் டிரெய்லரும் அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்படுகிறது. இது படத்திற்கான எதிர்பார்ப்பை பார்வையாளர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மார்வெல் திரைப்படங்களில் ஒன்றான டாம் ஹார்டியின் கடைசி ஆண்டி-ஹீரோ படம் இது. மேலும் மிகவும் பிரபலமான ஆண்டி-ஹீரோ பிரான்சைஸ் இதோடு முடிவுக்கு வருகிறது. த்ரிலிங் தருணங்கள், ஆக்‌ஷன் என டிரெய்லரில் இடம்பெற்றிருக்கும் பல தருணங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.

மார்வெலின் மிகச்சிறந்த மற்றும் மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஒன்றான வெனோமாக டாம் ஹார்டி ’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ இறுதிப் படத்திற்காக திரும்புகிறார். எடி மற்றும் வெனோம் இருவரின் உலகங்ளும் வேட்டையாடப்பட்டு இருவரும் பேரழிவு முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள்.

இப்படத்தில் டாம் ஹார்டி, சிவெடெல் எஜியோஃபர், ஜூனோ டெம்பிள், ரைஸ் இஃபான்ஸ், பெக்கி லு, அலன்னா உபாச் மற்றும் ஸ்டீபன் கிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஹார்டி மற்றும் மார்செல் ஆகியோரின் கதையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதி கெல்லி மார்செல் இயக்கியுள்ளார்.

படத்தை அவி ஆராட், மாட் டோல்மாக், எமி பாஸ்கல், கெல்லி மார்செல், டாம் ஹார்டி மற்றும் ஹட்ச் பார்க்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Latest articles

ப்ரைம் வீடியோ வழங்கும் அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ‘சிஸ்டம்’ படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது!

தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான 'சிஸ்டம்' திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது. ப்ரைம்...

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் 'வடசென்னை 2 ' படம் குறித்த ஒரு புதிய...

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் ப்ரோமோ.

https://www.youtube.com/watch?v=tMzHwOWtLuE முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து...

உத்சவ் 2026 விழாவில் ‘தேவி ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்ட ரவி மோகன்; ரசிகர்களைக் கவர்ந்த கெனீஷாவின் அதிரடி இசை நிகழ்ச்சி!

பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது....

More like this