HomeCinemaபிரபுதேவா, இயக்குநர் ஷக்தி சிதம்பரம் காம்போவின், இந்தியத் திரையுலகில் இதுவரை கண்டிராத கதைக்களம் கொண்ட ...

பிரபுதேவா, இயக்குநர் ஷக்தி சிதம்பரம் காம்போவின், இந்தியத் திரையுலகில் இதுவரை கண்டிராத கதைக்களம் கொண்ட ‘ஜாலியோ ஜிம்கானா.’

Published on

‘சார்லி சாப்ளின்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஷக்தி சிதம்பரம், பிரபுதேவா காம்போ மீண்டும் இணையும் படத்துக்கு ‘ஜாலியோ ஜிம்கானா’ என பெயரிடப்பட்டுள்ளது.

பிரபுதேவா, மடோனா செபாஸ்டின்,யோகிபாபு, அபிராமி, யாஷிகா ஆனந்த், புஜிதா பொன்னடா, ரெடின் கிங்ஸ்ட்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ரோபோ சங்கர், சுரேஷ் சக்ரவர்த்தி, சாய் தீனா, எம்.எஸ். பாஸ்கர், ‘டாக்டர்’ சிவா, ‘கல்லூரி’ வினோத், கோதண்டம், ‘ஆதித்யா’ கதிர், ஆதவன், தெலுங்கு ரகுபாபு, மரியா, அபி பார்கவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படம் இந்தியத் திரையுலகில் இதுவரை கண்டிராத கதைக்களத்தை கொண்டுள்ளது.

படத்தினை டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம். ராஜேந்திரராஜன் தயாரிக்கிறார். இந்த நிறுவனம் கதைகளுக்கு முக்கியத்துவமுள்ள படங்களைத் தயாரித்து வருகிறது. முன்பு ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற தமிழ்ப் படத்தையும் மராத்தி படம் ஒன்றையும் தயாரித்துள்ளது. இப்போது முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயினரான இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தின் தலைப்பு தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு தென்காசி, கொடைக்கானல் மற்றும் தமிழகத்தின் தென்பகுதியில் பல இடங்களில் நடந்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் “மக்களாக தேர்ந்தெடுத்த படத்தின் டைட்டில் மக்களிடம் எப்படி ரீச் ஆனதோ அதுபோலவே படமும் ரீச் ஆகும். ஏனென்றால் படம் கதையாகவும் விஷுவலாகவும் அவ்வளவு ரிச்சாக வந்துள்ளது. பட்ஜெட்டிலும் இது பெரியபடம். தயாரிப்பாளர் ராஜேந்திர ராஜன், பாடல்கள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கான பிரமாண்டமான செட்களை குறை வைக்காமல் செய்து தந்தார். படத்தின் திரைக்கதையைப் போலவே, பாடல்களும் இசையும் படத்தில் முக்கியமான ஒரு அம்சம். இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி அற்புதமான இசையைக் கொடுத்துள்ளார். கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவும், ஜனார்த்தனனின் கலை இயக்கமும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. எல்லா நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர். மக்களை கொண்டாட வைக்கும் அளவில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீடு எப்போது என்பதை விரைவில் தெரிவிக்கிறோம்” என்றார்.

படக்குழு:
இசை: அஸ்வின் விநாயகமூர்த்தி
பாடல் வரிகள்: மு. ஜெகன் கவிராஜ்
கலை இயக்கம்: ஜனார்த்தனன்
படத்தொகுப்பு: ‘அசுரன்’, ’விடுதலை’ புகழ் ராமர்
ஒளிப்பதிவு: கணேஷ் சந்திரா
நடனம்: பூபதி ராஜா
ஸ்டண்ட் மாஸ்டர்கள்: மகேஷ் மாத்திவ் மற்றும் பிரதீப்

Latest articles

‘இம்மார்டல்’ திரைப்படத்திலிருந்து வெளியான ‘லவ் யூ லவ் யூ காட்டேரி’ பாடலுக்கு இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=-vlnhbtkyhw இசையமைப்பாளர் சாம் சி எஸ் தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில்,...

ஹார்ட்டீன் சினிமா விமர்சனம்

இன்றைய தலைமுறையினரின் உணர்வுகளையும், காதலையும் மையமாகக் கொண்ட படம். ஜெய்ப்பூரில் உணவகம் நடத்தி வரும் சிவாவும் சாதனாவும் காதலர்கள். ஒரு...

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் சீரிஸ் விமர்சனம்

இன்ஸ்டா பிரபலங்களின் நடிப்புப் பங்களிப்பில் கிரிக்கெட் விளையாட்டையும் தீவிர ரசிகர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா. ஒரு கிராமத்தைச்...

எம் ஜி ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ் வரிசையில் பவிஷ் இடம் பெறுவார்! -‘லவ் ஓ லவ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு...

பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 'லவ் ஓ லவ்'...

More like this